மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

மய்யம் என்றொரு அயோக்யம்


இடதுசாரிக்  கொள்கையுமில்லை..
வலதுசாரிக் கொள்கையுமில்லை
நான் மய்யம்.

ஆரியமுமில்லை..திராவிடமுமில்லை 
நான் மய்யம் 

இரண்டிற்கும் பொதுவானவன் 
இரண்டுமே வேண்டுமென்பவன்.
இரண்டுமே சமம்  என்னும் நடுநிலையாளன்.

வழக்கம் போல் புரியவில்லையா ..

மோடியின் பக்கமுமில்லை 
அவரால் வஞ்சிக்கப்பட்ட 
தமிழகத்தின் பக்கமுமில்லை.
நான் மய்யம்...
இரண்டும் சம தூரம் எனக்கு.

வர்ணாசிரமத்தின் பக்கமுமில்லை 
அதன் கோட்பாட்டால் 
ஈராயிரமாண்டு ஒடுக்கப்பட்ட 
மக்களின் பக்கமுமில்லை..
நான்  மய்யம். 
இரண்டுமே சம தூரம் எனக்கு.

சாமானியனும் கார்ப்பரேட்டும், 
மாட்டிறைச்சிக்காய் கொல்லப்பட்டவனும் - அவனைக் கொன்றவனும் 
வைப்புத்தொகையின்றி வங்கியில் இழந்தவனும் - அதே வங்கியின் அனுமதிக்கப்பட்ட கொள்ளையனும்,
மீத்தேன் எடுப்பவனும் நெடுவாசல் மக்களும்,
புது டெல்லியும் கதிராமங்கலமும்,
சமதூரம் எனக்கு - ஏனெனில் 
நான் மய்யம்.

ராஜபக்சேவின் பக்கமுமில்லை - அவனால் 
கொல்லப்பட்ட லட்சோப லட்சம் 
ஈழத்தமிழர்களின் பக்கமுமில்லை 
நான் மய்யம்.

நிர்பயாவுக்கும் - அவளை கற்பழித்து 
கொடூரமாய்க் கொன்றவனுக்கும் 
சரியாய் சமதூரத்தில்..
நான் மய்யம்.

நொறுக்கப்பட்டவன் - அவனை நொறுக்குபவன்  
உழைப்பவன் - அவன் உழைப்பை உறிஞ்சுபவன்
இரண்டும் சமம் எனக்கு.. 
நான் மய்யம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...