மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ஆன்மீக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு

ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல. 

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.

அதன் பின்னணியிலேயே  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.
படம் நன்றி: தந்தி டிவி 
ரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.

அமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய  பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது. 

ஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது. 

எடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.

இனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.

ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது  வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?
அதனால் உமது பேட்டியிலிருந்தே சில கேள்விகள் .. 

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தபின்புதான் கலவரம் உருவாகியதென்று நேரில் பார்த்தவரைப்போல் அறுதியிட்டு கூறுகிறீர் ..
சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததால் காவலர்களுக்கு கோபம் வந்து பொது மக்களை சுட்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்? 

சமூக விரோதிகள், காவலர்களை அடிப்பதற்கு பதில் நேரடியாகவே மக்களை அடித்திருக்கலாம் தானே..கலைஞர் கைது சம்பவத்திற்கு பின்பு நடந்த பேரணியில் ஜெயலலிதா அப்படித்தானே அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்?

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தால் அவர்களைத்தானே சுடவேண்டும்? செத்தது சமூக விரோதிகளா? 

ஆம் என்றால் சமூக விரோதிகள் செத்ததற்கு நீர் ஏன் 'சுட்டது காட்டுமிராண்டித்தனம்'  என்று போனவாரம் பினாத்தினீர்? 

ஐயா.. உச்ச நடிகரே சில வார்த்தைகள்  உங்களுக்கு ...எங்கள் ஐயன் வள்ளுவன் வாயிலாக..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 
நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும் 
இனம்போலவே இருந்து உண்மையில் இனமல்லாதவரின் நட்பு பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் 

இணையதளம் பக்கம் சற்று எட்டிப்பாரும் எம் தமிழக மக்கள் உமது பேச்சுக்கான  எதிர்வினையை 
"செய்து" இருக்கிறார்கள். அறிந்து கொள்வீர் நீர் எமக்கு யாரென்று...

திருடன் திருடவும்


திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம் 
தன்னையும் மண்ணையும் சார்ந்த 
தன்மானக் குடியானதொருவன், 
சந்தையில் வாங்கிய ஆட்டை  
தன் தோளில் தூக்கி
சந்தோசமாய் சென்றான்
தன்  மந்தை நோக்கி ..

மறியைப் பறித்திட 
தீட்டினர் திட்டமொன்றை, 
யோக்கியனென்ற பெயரெடுத்த 
நாலு கடைந்தெடுத்த அயோக்கியர்கள். 

ஒருவன், 
பேரே யோக்கியன் 
தமிழ் தேசியமென 
தம்பட்டம் அடிக்கும் தகர சாமான். 

மற்றவன், 
மகா யோக்கியன் 
மய்யத்தில் நானென்பான் 
எவன் எக்கேடு கெட்டிடினும் 
எப்பக்கமுமில்லை,  நான் மையமென்பான். 

மூன்றாமவன், 
தீவிர யோக்கியன் 
ஆன்மீகப் புயலெனும் 
அமுங்கனிக் கள்ளன்.

அடுத்தவன், 
அதி தீவிர யோக்கியன். 
வளர்ச்சியென்பான் மலருமென்பான் 
வயசுக்கு வராத மொட்டைக்கூட 
கசக்கியெறியும் கள்ளவழி பிறந்த 
தேசபக்த காமுகன். 

நால்வரும் கண்டனர் மறியை 
கால்பங்கு ஆளாளுக்கு, காலோடு சேர்த்து
தனித்தனி செல்வதென முடிவு 
எத்தனித்தனர் எச்சில் ஊற

நாயை சுமப்பதேன் தம்பி.. 
வழிமறித்துக் கேட்டான்
முதலாம் யோக்கியன்,
முன்னோரின் ஓலையின்படி 
முப்பாட்டன் வழி  சொந்தம் 
நான் உன்னுடைய 
அண்ணனென்ற  அறிமுகத்தோடு!.
ஆட்டு மறியை   நாயென விளிக்கும் 
அதிசயப்  பயித்தியமா  நீ 
வழியை விடு என்றவாறே 
வழியைத்  தொடர்ந்தான் - ஆனால் 
அணுவளவு கீறல் அவனுள்ளத்தில் 

சற்று தூரம் கழிய 
மற்ற யோக்கியன் வந்தான், 
மய்யம் என்றவாறே !
பன்றியின் நிறம் கருப்பு - ஆனால் 
கறுப்பெல்லாம் கறுப்பல்லவென்று 
கரகரத்தான் கருஞ்சட்டையோடு ! 
கடுப்படிக்காதே விசயத்தைச்சொல் 
என வீரம் செறிக்க கேட்டவனிடம் 
அறமன்று பன்றியை சுமப்பது 
என்றவாறே ட்வீட்டவும் செய்தான் !!

சிறுகீறல் இப்போது 
சிக்கலாய் விரிந்தது !! 
விறுவிறுவென விற்றவுடன் 
கிளம்பிய வியாபாரியின்  பிம்பம் 
கண்திரையில் சிரித்தது !!
சந்தேகப்பட்டது சரிதானோ 
இல்லை இல்லை இது ஆடுதான் என்றான்
அடிமனதில் ஆட்டத்தை அடக்கிக்கொண்டு.

மூன்றாமவன் வந்தான் 
முப்பது முழ தூரம் கழித்து. 
வாயே தொறக்காதவன், 
வாயைப் பிளந்தான் ஆன்மீக வாடையோடு 
தோளை பார்த்து கத்தினான் 
இமயமலை மீது சத்தியம் 
நிச்சயம் நீ சுமப்பது பாம்பென்று !!

அடிமனதின் ஆட்டம் இப்போ உதறலாய் !!
என்னாச்சு உங்களுக்கென்று 
சில நாழிகை முன் கேட்டவன் 
என்ன நடந்தது எனக்கென்று 
தன்னைக் கேட்டான் சிந்தனையில் !!

கடைசியில் நின்றான் அதிதீவிர யோக்கியன். 
கல்லெறிக்குத் தப்பிய கள்வன் போல,
கத்தினான் கையால் பொத்தியபடி 
காவிப் பற்கள் தெரியாதபடி !!
இந்துவல்லவோ நீ 
அவன் பிணத்தை சுமப்பானேன் 
அசுத்தத்தை சுமக்காதேடா அம்பி !!

உதறல் உள்ளத்துக்குள் ஊக்கமாய் கொதித்தது
உளறல் எனலாம் ஒருவனென்றால்... 
அத்தனை பேரும் பொய்யாகுமோ?
மறியல்ல இது வேறெதுவோ..!! 
இறக்கிவிட்டு  ஓடினான்
தான் வந்த வழி தெறித்தபடி 
தன் நிலை நொந்தபடி 

நால்வரும் கூடினர் 
நாற் பங்காகியது மறி  
அறிந்து கொள் தமிழா 
விழித்துக் கொள் !!

ஆட்டைத் தொலைத்த 
அப்பாவியோடு போகட்டும்,
நாட்டைத் தொலைத்துவிடாதே !

அக்கறையன்று அவர் குரல் !!!
அடித்துச் சொல்கிறேன், 
திருடன் திருடவும் 
கொல்லவும்  அழிக்கவுமேயன்றி 
வேறொன்றுக்கும் வரான்...!!!

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்

நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை..!!

இன்னும் முக்கல..
தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன்மீக வியாதி ரஜினிதொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நிருபர்களை சந்தித்த ஆன்மீக வியாதி ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார். செய்தி இணைப்பு

இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லையென்றால், போன வாரம் எம்ஜிஆர் ஆட்சி என்னால் தர முடியும்னு உதார் விட்டது எந்த வகை? 

கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து கருத்துக் கேட்ட போதும் ஓடினீரே..அரசியல்வாதியாக அல்ல ஒரு சராசரி மனிதனாக கருத்துச்  சொல்ல மனித நேயம் போதுமே? அது கூடவா இல்லாத ஆன்மிகம் இருக்கிறது முதல்வர் கனவில் மிதக்கும் உமக்கு?

குரங்கணி காட்டுத்தீயில் கருகி விட்ட  "டமிலர்" களுக்கு இரங்கல் ட்வீட்  கூட தெரிவிக்க முடியாத  அரசியல் பயணத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் பாஜக முன்னாள் முதல்வர் பிரேம் குமாருடன் நித்தியானந்தா வகை ஆன்மிகம் பேசினீரோ? 
முழு அரசியல்வாதியாகும் ஆன்மீகத் தியானத்தின் போது 
அது சரி, அரசியல் ரீதியானதது, இல்லாதது என்ற கேள்விகள் பிரிக்க முடியுமா என்ன? மக்களை பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் பேசுவதும் செயல்படுவதும் தானே அரசியல்? அது கூட இல்லாமல் என்ன வெளக்கெண்ணைக்கு தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்?

தலைமை பண்பு, சேவை மனப்பான்மை   என்பது வாழ்க்கையோடு ரத்தத்தோடு  சிறுவயது முதல் நாடி நரம்பில்  கலந்தது..திடீரென்று உருவாகுவதல்ல  ரஜினி..!! அரிதாரங்கள்  எல்லாம் சீக்கிரத்தில் களைந்து போகும் என்பது உச்ச நடிகரான  உமக்கு நன்றாகவே தெரியும். 

வெற்றிடம் அரசியலிலா..?இல்ல..

யாரார்க்கு என்ன வேஷமோ...

தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பும் அம்பிகளில் இவரும்  ஒருத்தர்.

அரசியல் பேசக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனா அரசியல் பேச வச்சிட்டாங்கன்னு, வீட்ல ஏற்கனவே கண்ணாடி முன்ன நின்னு பல தடவ பேசிப் பார்த்த டயலாக்கை சும்மா அவுத்து விட்டுப்புட்டாரு நம்ம தலைவரு.

சரி, அப்படியே  அந்த மேடையில இவருக்கு முன்னாடி பேசுனவங்க  கடைசி நேரத்துல,  நான் உள்பட  யாருமே அரசியலே பேசக்கூடாதுங்கிற  இவரு விரதத்தை கலைக்க முடியும்னா ..

அரசியலுக்கு வந்த பின் எத்தனையோ பிரச்சினைகளை   தமிழகம் சந்தித்தபோது, உங்கள் கருத்து என்ன என்று பல மீடியாக்கள் மூலமா வலியுறுத்திக் கேட்டும் வாயத்தொறக்கலன்னா  அது கள்ள மௌனம் தானே? 

சரி அது கூட இருக்கட்டும். இப்ப சிங்கத்த  உசுப்பி விட்டுட்டாங்கல்ல.. எச்ச ராஜா பெரியார் சிலைய உடைப்போம்னு சொன்னது  தப்பா  இல்லையான்னு தன்  கருத்த சொல்லுவாருங்கிறீங்க?

ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் பிளவுகள் மற்றும் பாஜகவால் பொம்மையாக  ஆட்டிப்படைக்கப்படும் ஒரு லும்பன்களின் கூடாரத்தையும் ஒரு பலமுள்ள எதிர்க்கட்சியாக கட்டுக்கோப்பாக இருக்கும் திமுகவையும் நல்ல தலைமை இல்லாத வெற்றிடம் இருக்கிறது என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?


கண்ணா..இங்க பாரு..நீயா ஓடிடு..இல்லேன்னா ஓட வைப்போம். உன் முதலாளி பாஜகவையும் சேர்த்து.


நன்றி எச்ச..

காலி பண்ணிட்டீயே எச்ச ..அவ்வ்வ் 
கெட்டவர்கள் மூலமாகவும் சில சமயம் நல்லவைகள் நடப்பதுண்டு. 

அந்த வகையில், தமிழகத்திற்குப் பிழைக்க வந்து இன்றைக்கு தமிழக மக்களுக்கு  குறிப்பாக இளைஞர்களுக்கு  தமிழுணர்வையும் ஒற்றுமையையும்   தூண்டும் சக்தியாக தன்னையுமறியாமல் சதா உழைத்துக் கொண்டிருக்கும் "எச்ச" என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப் படும் திரு எச்.ராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல காரணம் உண்டு.

1. முன் தீர்மானிக்கப்பட்டு கூட்டப்பட்ட கூட்டத்தில்   திடீரென்று எம்ஜிஆர் பக்தனாக வேஷம் போட்ட  ஆன்மீக அரசியல்வாதியும் அவரின் நல்லாட்சி தந்திரமும்  பரபரப்பில்லாமல்  போய்விட்டது.

2. தமிழர்கள் சாதி, மதம், கட்சி, வயது வித்தியாசமில்லாமல் பாஜகவை நோக்கி கல்லெறியத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 2019 பாராளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வந்து விட்டது. 

நன்றி எச்ச...!

பின்  குறிப்பு: பெரியார் சிலையை நீ மட்டுமல்ல..வங்கியில்  கொள்ளையடித்தும், மோடியின் துணையோடு ஒரே வருடத்தில் 92000 கோடி வருமானம் பெருக்கியுமுள்ள பாஜகவின் பைனான்சியரான அதானியே  வந்தாலும் முடியாது. (உன் குடும்பத்துல உள்ள எல்லோர் பெயரையும் தமிழக மக்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஒரு சங்குக்கு ...சாரி.. சேஞ்சுக்கு அதானி)



கமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்?

லாஜிக் உதைக்குதே..

கமல் கட்சி ஆரம்பிப்பதால் தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாக ஆரம்பித்ததிலிருந்தே விமரிசித்தாலும் அவாளின் பத்திரிக்கையான தினமலர்  மட்டும் குதூகலத்துடன் நிமிடத்திற்கொரு தடவை கவரேஜ் செய்வதிலும் அதிலும் "கமல் பாஜக தலைவர்களை சந்திக்காததினால் தனக்கான பாதையை தெரிவு செய்து கொண்டார்" என்று கமலுக்கே தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.

படம் நன்றி: பத்திரிகை டாட் காம் &  "கரன்"
படம் நன்றி: பத்திரிகை டாட் காம் &  "கரன்"


வரமாட்டேன்ன்னு சொல்லு...

ஆன்மீக அரசியல்வாதியின் அப்டேட்
"தலைவர பேட்டி எடுக்க வந்திருக்கோம்" 

"ரெண்டு நாள் முன்னாடி தான வந்துட்டு போனீங்க"

"அது வந்து ..அன்னக்கி மத்திய பட்ஜெட்  பத்தி கருத்து கேட்கலாம்னு வந்தோம்.."

"அதான் அப்பவே சொன்னேன்ல..தலைவரு பாத்ரூம் ல இருக்காருன்னு.."

"இல்ல..இப்ப.. மதுர ஆதீனம் தமிழர்கள் இந்துக்கள் இல்லன்னு சொல்லிருக்காரு ..அதான் ஆன்மீக அரசியல் தலைவரு கருத்த கேப்போம்னு..வந்தோம் ....தலைவரு இருக்காரா..?"

"அதான் ரெண்டு நாள் முன்னாடியே சொன்னேன்ல.."

இமயமலைக்கு போயிட்டாருன்னு சொல்லச் சொல்லியிருக்கலாமோ?

லோகோ டிசைனிங் சென்டர்

 ( Cut & Paste மட்டும்)


கட்டிங்.வெட்டிங்.ஓட்டிங்

மிகவும் சிறந்த முறையில் Cut & Paste தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த விலையில் உங்கள் நிறுவனங்களுக்கு லோகோ தயாரித்து தரப்படும். 

குறைந்த விலைன்னா எவ்வளவு ...?

அதாவது எங்கள் மன்றத்தில் உறுப்பினரா சேரணும் ..அப்புறம் ரெண்டு பேர  சேர்த்து விடணும். 

அப்புறம்..?

இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்...


போடாங்ங்ங் ...

அரசியல்வாதி ரஜினியின் அப்டேட்

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த இடத்தில் ரஜினியின் வீட்டிற்கு வெளியே இரண்டு நாளாய் காத்துக் கிடந்து மயங்கி கிடந்த ரசிகக்குஞ்சு ஒருவரை "தெளிய வைத்து" விட்டு  அவரிடம்,  தலைவர் எப்போ வருவார் என்று கேட்கவும், தலைவர் ஏற்கனவே இருநூத்தி முப்பத்து நாலு தொகுதியிலும்....என்றவரை இடைமறித்து அட..ச்ச் சீ..எப்பய்யா வீட்டை விட்டு வெளிய வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே நீண்ட உறக்கத்துக்குப் பின் (தியானம் என்றும் அரை ட்ரவுசர்கள் சொல்வார்கள்) ஆன்மீக அரசியல்வாதி வந்தார்.

அவரிடம் நாம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் "நான் ஒரு தடவ சொன்னா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன மாதிரி" என்று கேட்க சொல்லி கையை ஸ்டைலாக அசைக்க..நாம் தொடர்ந்தோம்.

"ஐயா, இந்த ஆண்டாள் பற்றி உங்க திரைத்துறையை சேர்ந்த வைரமுத்து சொன்னது  குறித்து  உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

 "இந்த எச்.ராஜா அவர்களின் ஆன்மீகத் தனமான  அமைதியான  பதிலடி மேடைப்பேச்சு பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"தேசபக்தர்களின் சமீபத்திய அட்ராஸிட்டி  பற்றி?"

"நெக்ஸ்ட்"

"ஆண்டாள் பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"ஐயா ..இந்த தேவதாசி...அப்படீன்னு ..?"

(ஒருவித புன்முறுவலுடன்) "நெக்ஸ்ட்"

"ஆன்மீக அரசியல்வாதியான உங்களின் கருத்து ரொம்ப முக்கியம் ஐயா"

"வேற எதுவும் கேள்வி இருக்கா?"

"இல்ல.." (நீங்க வாய தொறந்தாதானே?)

"கண்ணா...கீழே பாரு..ஹா..ஹா..ஹா.."




ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...