மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்?


திமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது  காவிரி நீரை பெற்றுத்  தரவில்லை? திமுக கபட நாடகம் ஆடுகிறதா? 

...என்று மிக  அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் அடித்து அடித்து ஏற்றிக்   கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒரு மிகவும் எளிமையான ஒரு பார்வை. 

நேர்மையாளனாக சிந்தியுங்கள்.

இப்போது (02.04.2018) எதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது யார்?

உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் ஏன் அமைக்கச் சொன்னது?

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதித்தீர்ப்பு வழங்கியது?

திமுக 1989-1991 ஆட்சியால் 1991 ஜூன் 25ல் 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. (1991 ஜூன் 24ல் ஜெயலலிதா முதல்முறையாக ராஜீவ் மரண அலையில் ஜெயித்து முதல்வராக பதவி ஏற்றார். மறு  நாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

சரி, காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப் பட்டதால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப் பட்டது?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அவர்களால் அமைக்கப் பட்டது.

சரி..இப்போ சொல்லுங்கள். இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...