மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தந்தி டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தி டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு

ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல. 

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.

அதன் பின்னணியிலேயே  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.
படம் நன்றி: தந்தி டிவி 
ரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.

அமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய  பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது. 

ஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது. 

எடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.

இனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.

எடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா?

காட்சி ஊடகங்களும் அதில் பல்வேறு வேஷங்களில் காட்சி கொடுக்கும் அம்பிகளும்  அதிமுக கூன்பாண்டிகளும் கூறிக்கொள்வது "பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எடப்பாடி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதே சாதனை தான்" என்பது.

அரசு ஊழியர் போராட்டம், அரச போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி, விவசாயிகள் போராட்டம், நீட் பிரச்சினை, தலைமை செயலாளர் அலுவலக ரெயிடு, குட்கா விவகாரம், எம் எல் ஏக்கள் நீக்கம் என்று  எந்தப்  பிரச்சினையானாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் காலில் மண்டியிட்டு ஆளுநர் உதவியோடு   தமிழகத்தின் உரிமையை அதன் மானத்தோடும் கூட விற்றுப் போட்டது சாதனையென்றால்..

மாட்டிக்கொள்ளாமல் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலும் சாதனை தானே?



ஆபரேஷன் தமிழ்நாடு?

சோழியன் குடுமி சும்மா ஆடாது 



மிகப்பெரிய பொய்யை மிகச் சாதாரணமாக சொல்வதும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதும்  ஆரியனின் இயல்பு என்பதே ஈராயிரம் ஆண்டு வரலாறு. வரலாற்றை எத்தனைதான் திரித்து ஓதினாலும், உண்மைகளும் தொடர்ந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளது.

இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதின்  நோக்கமே   நம் பங்குக்கு நாம் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும் என்பதால் தான். தமிழகம் நாளை இன்னொரு உத்திரப்பிரதேசமாகவோ குஜராத்தாகவோ மாறக்கூடாதென்பதற்காக எம்மால் இயன்ற விழிப்பைச்  செய்ய எத்தனிக்கிறோம்.

கடந்த சமீப காலங்களாக, அதுவும் ஆர்கே நகரில் நோட்டாவுக்கும் கீழே மண்ணைக்கவ்விய பின் காவிகளின் போக்கில் ஒரு ஆக்ரோஷமான  வித்தியாசம் உண்டு. 

எச் ராஜா என்பவர் எப்போதுமே தன்னுடைய தரத்தில் பேசுகிறார் என்பதால் கண்டுகொள்ளத்  தேவையில்லை. அவர் அப்படி பேசுவதுதான் மக்கள் இன்னமும் துரத்தியடிக்கத் தேவையானதும் கூட.

ஆனால், ஜீயரின் சோடா பாட்டில் வசனம், நயினார் நாகேந்திரனின் தலைக்குப் பரிசு அறிவிப்பு, தொலைக்காட்சி விவாதங்களில் விமரிசகர், பாஜக ஆதரவாளர், நிபுணர் என்ற பெயர்களில் கலந்து கொள்ளும் அம்பிகள் மற்றும் அடிவருடிகளின் மொக்கத்தனமான கூச்சல்களும் மட்டுமல்லாது, தந்தி டிவி பாண்டே போன்றோரின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்னமும் நூதனமான பிரச்சாரமே.

திருச்சி வேலுச்சாமி என்பவர்  கடந்த மக்கள் மன்றத்தில் பேசும்போது இந்தியா பாகிஸ்தான் போரில் தன்  உயிரை ஈந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு இஸ்லாமிய போர் வீரனைப் பற்றி பேசும்போது குறுக்கிட்ட பாண்டே, "அவர் ஒரு இஸ்லாமியரா இந்தியரா" என்று நல்லவனை போல விஷத்தைக் கக்குகிறார்.

இஸ்லாமியர்கள்  எல்லாரும் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று மூலைக்கு மூலை காவிகள் கொக்கரித்ததை அவர்கள் இந்தியர்கள்தானே என்று பாண்டே போன்றவர்கள் அதே மேடையில் ஜீயர் போன்றோர் இருக்கும் பொழுது ஒரு நடுநிலை ஊடகவியலானாக பதிவு செய்யமாட்டார்.

ஏனென்றால் ஆபரேஷன் தமிழ்நாடு திட்டத்தில் அவர் ஒரு மூலைக்கல். எனவே மக்கள் மன்றம் நிகழ்ச்சியை புறக்கணிப்பது பொதுமக்களின் இன்றைய கடமை. 


 

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...