மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!



"பொய்யை நம்பும்படியாக சொல்லு. மக்கள் நம்பாவிட்டாலும் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டே இரு. காலப்போக்கில் மக்கள் அதை நம்புவார்கள்" என்றான் அடால்ப் ஹிட்லர்.  அவனின் வாரிசுகள் அல்லது அவன் தத்துவத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் இன்று வரை இந்தியாவில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

கருத்து திணிப்புகளை மக்கள் சமீப காலமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாலும் தங்களுடைய தொடர்ச்சியான பொய்களினால் மக்களை உளவியல் ரீதியாக தயார் செய்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. 

கீழே உள்ள நேற்றைய மோசடி திணிப்பு ஒரு எடுத்துக்காட்டு.


ரஜினி கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் மொத்தமுள்ள அவருடைய சில ஆயிர ரசிகர்களைத் தவிர மிக சாதாரணமான சாமானியனிலிருந்து படித்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாஜகவைத்தவிர கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே மிக்க கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் இருப்பதை கண்கூடாகவே காணமுடிந்தது.

ஆனால் இந்த மோசடித்திணிப்பு 16 சதவீதம் (தினமலரில் 17 சதவீதம்) ஓட்டும் 30 தொகுதிகளையும் பிடிப்பார் என்று முதலில் ஒரு சிறிய சதவீதத்தை சொல்வது போல சொல்லி பொய்யாக ரஜினியின் இருப்பை மக்கள் மனதில் நிறுத்தவே இந்த முயற்சி. உண்மையில் 2 சதவீதம் கூட பிடிப்பாரா என்றால் நிச்சயம் முடியாது. அவருடைய ரஜினிமன்றம் ஆள்பிடிப்பு தளத்தில் இன்னும் 50 ஆயிரம் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு தெளிவில்லாத, முடிவெடுப்பதில் குழப்பவாதியான அதுவும் பாஜக சார்புள்ள ஒரு நடிகரை நம்பி 30 தொகுதிகளை தமிழக மக்கள் தருவார்கள் என்று சொல்லுவது எப்படியென்றால், ஜெயிக்கமாட்டார் ஆனால் 30 இடங்களை பெறுவார் என்று உளவியல் ரீதியாக மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தந்திரமே.

பின்னால், கட்சி பெயர் கொள்கை கூட்டணி என்று வரும்போது 30 இடங்களை 60...90...என்று படிப்படியாக திணிப்புகளை வெளியிட்டு கடைசியில் திமுகவிற்கும் ரஜினிக்கும் சமமான வாய்ப்பு என்று தேர்தல் நேரத்தில் பினாத்துவதற்கான அடித்தளமே இந்த மோசடி கருத்துக்கணிப்பு.

உண்மையில், ஆளும் அதிமுக மீதும் மத்தியில் ஆளும் பாஜக மீதும் அதீத வெறுப்பில் உள்ள தமிழக மக்கள் தூக்கி எறியவே தயாராக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ..ரஜினியையும் சேர்த்து. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...