மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

பாண்டேக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாண்டேக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா?

காட்சி ஊடகங்களும் அதில் பல்வேறு வேஷங்களில் காட்சி கொடுக்கும் அம்பிகளும்  அதிமுக கூன்பாண்டிகளும் கூறிக்கொள்வது "பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எடப்பாடி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதே சாதனை தான்" என்பது.

அரசு ஊழியர் போராட்டம், அரச போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி, விவசாயிகள் போராட்டம், நீட் பிரச்சினை, தலைமை செயலாளர் அலுவலக ரெயிடு, குட்கா விவகாரம், எம் எல் ஏக்கள் நீக்கம் என்று  எந்தப்  பிரச்சினையானாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் காலில் மண்டியிட்டு ஆளுநர் உதவியோடு   தமிழகத்தின் உரிமையை அதன் மானத்தோடும் கூட விற்றுப் போட்டது சாதனையென்றால்..

மாட்டிக்கொள்ளாமல் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலும் சாதனை தானே?



ஆபரேஷன் தமிழ்நாடு?

சோழியன் குடுமி சும்மா ஆடாது 



மிகப்பெரிய பொய்யை மிகச் சாதாரணமாக சொல்வதும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதும்  ஆரியனின் இயல்பு என்பதே ஈராயிரம் ஆண்டு வரலாறு. வரலாற்றை எத்தனைதான் திரித்து ஓதினாலும், உண்மைகளும் தொடர்ந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளது.

இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதின்  நோக்கமே   நம் பங்குக்கு நாம் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும் என்பதால் தான். தமிழகம் நாளை இன்னொரு உத்திரப்பிரதேசமாகவோ குஜராத்தாகவோ மாறக்கூடாதென்பதற்காக எம்மால் இயன்ற விழிப்பைச்  செய்ய எத்தனிக்கிறோம்.

கடந்த சமீப காலங்களாக, அதுவும் ஆர்கே நகரில் நோட்டாவுக்கும் கீழே மண்ணைக்கவ்விய பின் காவிகளின் போக்கில் ஒரு ஆக்ரோஷமான  வித்தியாசம் உண்டு. 

எச் ராஜா என்பவர் எப்போதுமே தன்னுடைய தரத்தில் பேசுகிறார் என்பதால் கண்டுகொள்ளத்  தேவையில்லை. அவர் அப்படி பேசுவதுதான் மக்கள் இன்னமும் துரத்தியடிக்கத் தேவையானதும் கூட.

ஆனால், ஜீயரின் சோடா பாட்டில் வசனம், நயினார் நாகேந்திரனின் தலைக்குப் பரிசு அறிவிப்பு, தொலைக்காட்சி விவாதங்களில் விமரிசகர், பாஜக ஆதரவாளர், நிபுணர் என்ற பெயர்களில் கலந்து கொள்ளும் அம்பிகள் மற்றும் அடிவருடிகளின் மொக்கத்தனமான கூச்சல்களும் மட்டுமல்லாது, தந்தி டிவி பாண்டே போன்றோரின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்னமும் நூதனமான பிரச்சாரமே.

திருச்சி வேலுச்சாமி என்பவர்  கடந்த மக்கள் மன்றத்தில் பேசும்போது இந்தியா பாகிஸ்தான் போரில் தன்  உயிரை ஈந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு இஸ்லாமிய போர் வீரனைப் பற்றி பேசும்போது குறுக்கிட்ட பாண்டே, "அவர் ஒரு இஸ்லாமியரா இந்தியரா" என்று நல்லவனை போல விஷத்தைக் கக்குகிறார்.

இஸ்லாமியர்கள்  எல்லாரும் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று மூலைக்கு மூலை காவிகள் கொக்கரித்ததை அவர்கள் இந்தியர்கள்தானே என்று பாண்டே போன்றவர்கள் அதே மேடையில் ஜீயர் போன்றோர் இருக்கும் பொழுது ஒரு நடுநிலை ஊடகவியலானாக பதிவு செய்யமாட்டார்.

ஏனென்றால் ஆபரேஷன் தமிழ்நாடு திட்டத்தில் அவர் ஒரு மூலைக்கல். எனவே மக்கள் மன்றம் நிகழ்ச்சியை புறக்கணிப்பது பொதுமக்களின் இன்றைய கடமை. 


 

பாண்டே பயங்கரவாதம்

என் பொய்களுக்கு என்ன பதில்?

வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கருத்தை சர்ச்சையாக்கி, திரும்பத் திரும்ப அது குறித்த செய்திகளையும் விவாதங்களையும் நடத்தி தமிழகத்தில் எப்படியாயினும் இந்துக்களாய் ஒன்று சேர்த்து விடலாம், அவர்கள் முதுகில் சவாரி செய்யலாம் என்று விடா முயற்சி செய்து ஓரளவுக்கேனும் ஒரு தளத்தை உருவாக்கி வைத்திருந்ததை புன்முறுவலோடு கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் பார்த்து  விஜயேந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததினால் தமிழர்களாய் ஒன்று சேர்ந்து கும்மியடித்து விட்டதில் கலங்கியிருந்த காவிகள் தரப்புக்கு இப்போ இன்னொரு பிரச்சினை.

அது தான் நீட் தேர்வு வர இருக்கிறது.

கடந்த வருடமே பாஜகவுக்கு எதிராக ஆப்புகள் கூர்சீவப்பட்டிருந்ததை அறியாதவரல்ல  பாண்டே . கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி மூலமாக எத்தனை முறை அசிங்கப்பட்டிருந்தாலும் துடைத்துக் கொண்டு களமிறங்கிருக்கிறது அடுத்த முயற்சியில்.


நேற்று திமுகவின் நேரு பேசியதை அப்படியே திரித்து, தந்தி டிவியினுடைய ட்விட்டர் பக்கத்தில்  முட்டு சந்தில் சிக்கியவராய்  வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த அதி தீவிர யோக்கியர்.

நேரு பேசிய வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்..நீங்களும் உங்கள் பங்குக்கு....எவ்வ்வ்வளவு முடியுமோ...அவ்வளவு...





ரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.

கேள்விகள் மட்டுமே கேட்பதாயின் சிறப்பு விருந்தினர் எதற்கு Mr. Pandey?

திரு சுப.வீ அவர்களுடனான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளை பற்றியோ அல்லது சுபவீ ஐயா அவர்களின் பதில்களைப்பற்றியோ அல்ல எமது பதிவு.
நீண்ட காலத்திட்டத்தின் நிகழ்காலக்  கறை 

ஆனால், ???? பதிலே சொல்ல விடாமல் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததின் காரணமும் அதிலும் குறிப்பாக எச்ச.ராஜா பேசியதை பற்றி பேசவே கூடாதென்ற அயோக்கியத்தனமான வாதமும் கீழே உள்ள வாட்ஸப் தகவல்களும் ஒன்றோடொன்று மிகச்சரியாய் பொருந்துகிறதே பாண்டே? பீகாரிலிருந்து வந்த உனக்கு வாழ இடம் கொடுத்த தமிழகம் வாழ மட்டுமே வைக்கும்..ஏமாளியாய் இராது. 


பாண்டே..உங்கள் முயற்சி பலிப்பதற்கு இது உ.பி அல்ல. உலகை ஆண்ட தமிழ்நாடு!! தமிழ் படித்த நீர் எங்கள் வரலாற்றைப் படிக்க மறந்து விட்டீர். பாரும் கண்முன்னே..காதில் புகையோடு. நேரத்துடன் கிளம்பும்..பீகார் செல்லும்   ரயில் பிளாட்பாரத்தில் அதிக  நேரம் நிற்காது. 



கல்லுளி மங்கன்

தலைவர் ஒருதடவ கூட..

'டமிலர்'களை நல்லா வாழ வைக்க லேட்டஸ்டா வந்த வர்ணாசிரமப் புலி 

அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வராமலே அவரு காவிரில என்ன சொன்னாரு ஈழத்தமிழர் களுக்கு என்ன கதைச்சாருன்னு எப்புடி கேட்க முடியும்னு முட்டுக் கொடுத்த குடுமி கூட்டத்தை சேர்ந்த அறிவாளிகள்  பாண்டேக்கள்  மணியன்கள் போன்றோரின் முகத்துல சாணியடிச்ச மாதிரி நம்ம தலைவர்..அதாங்க கண்டக்டரா இருந்த எனக்கு  ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த 'டமிலர்'களை  வாழ வைக்கணும்னு மலேசியா தமிழர்ட்ட பிச்சை எடுத்தப்ப சொன்னாருல்ல அவரு தான்...

கடந்த எட்டு நாளா தங்களோட எதிர்காலத்துக்காக தங்களோட சம்பளத்துல இருந்து பிடித்தம் செய்த பணத்தை கொடுங்கன்னு குடும்பத்தோட நடு ரோட்டுல நின்னப்ப, அவரு ஏற்கனவே சொன்ன "சிஸ்டம் சரியில்ல"ங்கிற வார்த்தையைக் கூட சொல்லாம தலைமறைவாயிட்டாரு நாளைய முதல்வர். (எதுக்கு முதல்வர்னு கேட்கக்கூடாது..அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுவேன்)

வெறும் "வாயை "மட்டுமே வச்சி பொழப்பு நடத்துறவங்கள பார்த்திருக்கோம். இவரு வாயைக்கூட திறக்காம ஸ்ட்ரெயிட்டா முதலமைச்சரா கனவு கண்டுட்டு சிஸ்டம் வாங்க சாமியார்களை தேடி போயிட்டாரு அரசியல் வாதி ரஜினி.




ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...