மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

நீட் எனும் மோசடி


ஆச்சரியம் என்னவென்றால், தலைக்கு 15 லட்சம் டெபாசிட் தொடங்கி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பர்மாவில் நூறு தீவிரவாதிகள் சுட்டதாக பீலா, கறுப்பு பணம் மீட்பு, தேர்தல் கமிஷன், நீதித்துறை, பணமதிப்பிழப்பில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பணத்தை எண்ணிக்கொண்டே இருப்பது,  பின்வாசல் வழி ஆட்சி, கவர்னர் ஆட்சி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் குறித்த நீதிமன்ற வேஷங்கள் என்று விடிந்தது முதல் அடையும் வரை ஓயாமல் அண்டப்புளுகு புளுகிக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வில் மட்டும் நியாயமாகவா நடந்து கொள்ளும்?

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருப்பதால் தான் வேண்டாம் என்கிறார்கள். இன்னும் சிலர் மாநில பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எந்த பாடத்திட்டத்தில் இருந்தாலும் நீட் தேர்வு என்பதே மோசடி செய்யத்தான்  கொண்டு வருகிறார்கள் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

இந்த வருட தேர்வு முடிவுகளில்  உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் தமிழகத்தை விட மிக அதிக தேர்ச்சி விகிதத்தை கங்கையில் மிதக்கும் சடலம் கூட நம்பாது.

குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று சொல்லி பைனான்ஸ் கம்பெனிகள் பணத்தை உருவிக்கொண்டு ஓடியதைப்போல தரமான மருத்துவர்கள் என்று சொல்லி தலையில் நீட் எனும் மிளகாயை அரைத்து விட்டார்கள்.

உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பைக்கொண்ட தமிழகத்தில் நீட் எனும் பெயரால் வடமாநிலத்தவர் பயன்படுத்திக்கொள்ளவே இந்த நீட்  தேர்வு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

நீ அரிசி கொண்டு வா 
நான் உமி கொண்டு வாரேன்  
ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் 

என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்


இந்திய விமானப்படையில் பணிசெய்து கொண்டிருக்கும்போது,  ஆர் எஸ் எஸ் (Rashtriya Swayamsevak Sangh) பிரச்சாரம் செய்த கொள்கைகளைப்பார்த்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியை  விட்டு விட்டு ஆர் எஸ் எஸ் ஸில் முழுநேர பணியாளராக சேர்ந்து பதினைந்து வருடங்களாக வேலை செய்கிற ஒரு  ஆர் எஸ் எஸ் காரர் வாக்குமூலத்தை  மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நம் நண்பர் வாட்ஸாப்பியிருந்தார். 

மிகச்சரியான வார்த்தைப்பிரயோகம் இல்லாவிட்டாலும் அவர் சொல்ல வந்த கருத்தை என்  நடையில் மொழிபெயர்த்துள்ளேன். 

நிருபர்: என்னோடு கூட ஆர் எஸ் எஸ் ஸில் கிட்டத்தட்ட 15 வருடமாக பணிசெய்யும்  நபர் இருக்கிறார்.  ஆர் எஸ் எஸ் பற்றி இவரிடம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பெயர் என்ன?

நான்..விஜய் காஷ்யப் , பீகாரிலிருந்து வருகிறேன். இந்திய விமானப்படையில் ஏவுகணை செலுத்தும் பொறியாளராகப் பணியாற்றினேன். தேசத்திற்காக  சமூக சேவையே சிறந்தது என்று அந்த பணியை விட்டு விட்டேன். அதன் பின்பு ஆர் எஸ் எஸ் என்பது தேச நன்மைக்காக இருக்கிற தன்னார்வ நிறுவனம் என்று கருதி அதில் சேர்ந்து பதினைந்து வருடம் சேவை செய்து கடைசியில் இந்திய அளவில் தொழில் துறை தலைவர் என்ற நிலையில் இருந்தேன்.  ஆனால் எந்த நோக்கத்திற்காக விமானப்படை பணியைத் துறந்தேனோ அந்த வழியில் ஆர் எஸ் எஸ் செல்லவில்லை என்பதை புரிந்துகொண்டேன். 

(நிருபர் குறுக்கிட்டு): ஆர் எஸ் எஸ் எந்த வழியில் செல்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

தேசத்தின் 90 சதவீத மக்களுக்கான நன்மைக்கான எந்த நோக்கமும் ஆர் எஸ் எஸ் ஸிடம்  கிடையாது. அதனால் அங்கேயிருந்து ஏமாற்றமடைந்து...

(நிருபர் குறுக்கிட்டு): அப்படியானால் யாருடைய நன்மைக்கான திட்டம் வைத்திருக்கிறார்கள்?

தங்களுடைய நன்மைக்கான திட்டம் மட்டுமே..எப்படி டாட்டா ஒரு பொருளை தன்னுடைய லாபத்திற்காக உற்பத்தி செய்கிறதோ  அப்படி..

அப்படியானால் எந்த மக்களுக்கான நன்மைக்கானது அவர்களின் நோக்கம்?

ஆர் எஸ் எஸ் ஸின் வரலாற்றை  பார்த்தோமானால் தங்களை நிலை நிறுத்தவும் தங்களுடைய யோசனையை நிலைநிறுத்தவும் நூற்றாண்டுகளாக  பாரதத்தில் 4500 - 5000 வருடங்களாக  எந்த மனப்பான்மை  அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைத்திருத்திருக்கிறதோ ...

(நிருபர் குறுக்கிட்டு): எந்த மனப்பான்மை என்று தெளிவாக சொல்லுங்களேன்.. 

பாருங்கள்.. ஆர் எஸ் எஸ் என்பது உலகத்தின் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எனக்கு பதினைந்து வருடமாகியது. நான் ஏன் வெளியேறினேன் என்பதை நீங்கள் நுட்பமாக அறிந்து கொள்ளவேண்டும். எந்த தேசத்தின்  சமூக சேவை செய்வதற்காக நான் விமானப்படை பணியையே  விட்டுவந்தோனோ அந்த தேசத்தின் சேவை செய்வதற்கான எந்த திட்டமும் இங்கேயில்லை.

ஆர் எஸ் எஸ் ஸில்  எந்த திட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை?

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்திருக்கிறது. தேசத்தின் சேவைக்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரையும்  கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் நிறைய நல்லவர்கள் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசத்தின் சாமானியனாகிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக்குறித்து  அக்கறை கொள்வதற்கு  எந்த திட்டமும் இல்லை.

அப்படியானால் யாரைக்குறித்து அக்கறை கொள்கிறார்கள்? பதினைந்து வருடங்கள் இருந்ததால் தெரியுமல்லவா?

இந்து மதம் , இந்து ராஷ்டிரத்தைக்குறித்து பேசுகிறார்கள். இந்து மதம் என்பது இவ்வளவு சிறந்ததாக இருக்குமென்று சொல்வேனேன்றால் , லட்சக்கணக்கான இந்துக்களாகிய ஏழைகள் சாமானியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள்  குறித்து சிந்திக்க வேண்டும்.

நீங்கள் ஆர் எஸ் எஸ் ஸில் சேரும்போது அவர்களுடைய வேலை என்ன என்று உங்களுக்கு தெரியாதா?

தேசத்திற்காக தன்னார்வ  சேவை (RSS) என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள், ஆனால் தேசத்தின் சேவை என்ற பெயரில் நடக்கிறது  எதுவோ..

(நிருபர் குறுக்கிட்டு): எது நடக்கிறது என்று மக்களுக்கு சொல்லுங்கள்..

மநு ஸ்மிரிதி யை திரும்பவும் இந்தியாவில் நிலைநிறுத்தவும்,  பிராமணர்களை மீண்டும் ஆதிக்கத்தில் கொண்டு வரவும்,  ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் இரண்டரை சதவீதமாகிய அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீத மக்களை எப்படி  ஆளுகை செய்வது என்பதே ஆர் எஸ் எஸ் ஸின் திட்டம்.

அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும்போது இதுகுறித்து விவாதிப்பார்களா?என்ன விவாதிப்பார்கள்?

ஆர் எஸ் எஸ் ஸிடம் உள்ள மறைக்கப்பட்ட எதோ திட்டம் உள்ளதுபோல ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் செய்கிற காரியங்களிலிருந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த தேசத்தின் லட்சக்கணக்கான மக்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். நான் விமானப்படையின் பணியை விட்டுவிட்டு சேவைக்காக வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நோக்கமெல்லாம் இந்து ராஷ்டிரம்.. இந்துராஷ்டிரம்.. என்பதுதான்.  இந்தியா.. இந்தியா என்று சொல்லி இந்தியாவின் நன்மையை  குறித்து சிந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. 

அப்படியென்றால் என்ன கொள்கை அவர்களுக்கு?

அவர்கள் அவர்களுக்காகவே கடையை திறந்திருக்கிறார்கள்...மநு ஸ்மிருதியை வியாபாரம் செய்கிறார்கள். மநுஸ்மிருதி சொல்கிறது பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் ஒடுக்கப்பட்டவனும் நம் காலின் செருப்பு போன்றவர்கள். அவர்கள் செருப்பாகவே இருக்கவேண்டும்.

என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்..நீங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்..பின் எப்படி பதினைந்து வருடம் இருந்து  இந்திய அளவில் துறை  தலைவராக உயர்ந்தீர்கள்?

நான் தேசத்தின் சேவைக்காக சென்றேன். 

அப்படியானால் நன்றாக சேவை செய்ய வேண்டியதுதானே?

ஆர் எஸ் எஸ் ஸில் உள்ள நல்ல விஷயம் என்பது ஒருவனை நல்ல தலைவனாக உருவாக்குவார்கள். ஆனால் தேசத்திற்காக அல்ல..தங்களுடைய அமைப்பிற்காக மட்டுமே. தேசத்தின் சேவை செய்ய விடவும் மாட்டார்கள்.  நான் தேசத்திற்காக மரிக்கவும் தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட படிப்பினையை அவர்கள் கற்றுத்தருவார்கள். ஆனால் சாமானியனுக்காக உழைப்பதற்காக அல்ல தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே.

இஸ்லாமியர்களைக்குறித்து என்ன விவாதிப்பார்கள்?

இந்தியாவில் இருப்பவன் எல்லாருமே இந்துக்கள் தான். இஸ்லாமியர்களும் இந்துதான். அதெப்படியாகும்? அவர்கள் எப்படி இந்துக்கள்? இவர்கள் இந்து.. இந்து மதம்  என்று தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்க செய்கிறார்கள். ஆனால் இந்து என்ற வார்த்தையே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றில் கிடையாது. 

உங்களைப்போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன விதமான மரியாதை?

அதைக்குறித்து யோசித்தால் அந்த அமைப்பிலேயே நான் இருக்க முடியாது. தகுதியில்லாத நபர்களெலாம் தலைவராக வருகிறார்கள்.

ஏன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடியை பிரதமராக ஆக்கவில்லையா?

இல்லை..அவரை தலைவராக ஆக்குவதற்கென்றே பிற்படுத்தப்பட்டவரென்று மாற்றினார்கள்..ஆனால் அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை. சில வருடங்கள் முன்பு அவர் பிற்படுத்தப்பட்டவர் இல்லை.

உங்களுடைய கோரிக்கை என்ன?

என் விஷயமாக மோகன் பாகவத்திடம் சொல்லுங்கள். இந்த அமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமே இல்லை.

தலித்துகள்?

அவர்களைக்குறித்த கேள்வியே கிடையாதே..

கடைசியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.

காணொளி இணைப்பு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...