மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

கருத்துக்கணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துக்கணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு

ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல. 

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.

அதன் பின்னணியிலேயே  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.
படம் நன்றி: தந்தி டிவி 
ரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.

அமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய  பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது. 

ஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது. 

எடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.

இனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.

வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. 

கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்?

தேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்  அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.

அவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்துக்கள் !!


கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. 
ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே 
கருத்துக்கணிப்பு வரும் முன்னே.

இதோ வந்து விட்டது..!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால்  இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.

தொங்கு சட்டசபை அமையும், ஆனாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கேப்பையில் நெய் வடிக்கும் செயலை தொடங்கி விட்டார்கள்.

இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரூ மீடியாவை வைத்து பாஜக குறைந்த  இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் என்று எருமையை ஏரோப்பிளேன் ஓட்ட வைப்பார்கள்.

கடைசியில் அடிமை  தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடும் பாதுகாப்போடும் தங்களுடைய ஓட்டு மெஷினை வைத்து "கேக்குறவன் மட்டுமல்ல .. கேக்காதவனும் கேனையன்" அப்படின்னு வழக்கம் போல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றின்னு கொக்கரிப்பார்கள்.

கர்நாடக மக்கள் வீறு கொண்டு எழுந்து புரட்சி செய்வார்களா? 

ஓட்டு மெஷினில் ஒரு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளுக்கு மட்டுமே மோசடி செய்து வைத்திருப்பார்கள்.  பதிவாகும் வாக்குகளில் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தாமரைக்கு எதிராக விழுந்தால் காவி பூனைக்கு மணி கட்டுவது மட்டுமல்ல வாயில் பசுவின் கோமியத்தையும் வைக்கலாம்.

செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..!



"பொய்யை நம்பும்படியாக சொல்லு. மக்கள் நம்பாவிட்டாலும் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டே இரு. காலப்போக்கில் மக்கள் அதை நம்புவார்கள்" என்றான் அடால்ப் ஹிட்லர்.  அவனின் வாரிசுகள் அல்லது அவன் தத்துவத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் இன்று வரை இந்தியாவில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

கருத்து திணிப்புகளை மக்கள் சமீப காலமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாலும் தங்களுடைய தொடர்ச்சியான பொய்களினால் மக்களை உளவியல் ரீதியாக தயார் செய்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. 

கீழே உள்ள நேற்றைய மோசடி திணிப்பு ஒரு எடுத்துக்காட்டு.


ரஜினி கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் மொத்தமுள்ள அவருடைய சில ஆயிர ரசிகர்களைத் தவிர மிக சாதாரணமான சாமானியனிலிருந்து படித்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாஜகவைத்தவிர கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே மிக்க கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் இருப்பதை கண்கூடாகவே காணமுடிந்தது.

ஆனால் இந்த மோசடித்திணிப்பு 16 சதவீதம் (தினமலரில் 17 சதவீதம்) ஓட்டும் 30 தொகுதிகளையும் பிடிப்பார் என்று முதலில் ஒரு சிறிய சதவீதத்தை சொல்வது போல சொல்லி பொய்யாக ரஜினியின் இருப்பை மக்கள் மனதில் நிறுத்தவே இந்த முயற்சி. உண்மையில் 2 சதவீதம் கூட பிடிப்பாரா என்றால் நிச்சயம் முடியாது. அவருடைய ரஜினிமன்றம் ஆள்பிடிப்பு தளத்தில் இன்னும் 50 ஆயிரம் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு தெளிவில்லாத, முடிவெடுப்பதில் குழப்பவாதியான அதுவும் பாஜக சார்புள்ள ஒரு நடிகரை நம்பி 30 தொகுதிகளை தமிழக மக்கள் தருவார்கள் என்று சொல்லுவது எப்படியென்றால், ஜெயிக்கமாட்டார் ஆனால் 30 இடங்களை பெறுவார் என்று உளவியல் ரீதியாக மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தந்திரமே.

பின்னால், கட்சி பெயர் கொள்கை கூட்டணி என்று வரும்போது 30 இடங்களை 60...90...என்று படிப்படியாக திணிப்புகளை வெளியிட்டு கடைசியில் திமுகவிற்கும் ரஜினிக்கும் சமமான வாய்ப்பு என்று தேர்தல் நேரத்தில் பினாத்துவதற்கான அடித்தளமே இந்த மோசடி கருத்துக்கணிப்பு.

உண்மையில், ஆளும் அதிமுக மீதும் மத்தியில் ஆளும் பாஜக மீதும் அதீத வெறுப்பில் உள்ள தமிழக மக்கள் தூக்கி எறியவே தயாராக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ..ரஜினியையும் சேர்த்து. 


ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...