மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

யோக்கியன் வர்றான்..

கம்பெடுத்து வெளில வை..தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (!!!???) போராட்டக்காரர் அன்னா ஹசாரே இன்று தெரிவித்தார்.

தேர்தல் வரும் பின்னே யோக்கியன் வருவான் முன்னே என்கிற நவீன மொழிக்கேற்ப வந்துட்டார் இந்த மகா யோக்கியர். 

கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் மக்கள் அல்லோகலப்பட்டு கிட்டத்தட்ட இந்தியாவை நாற்பது ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு  போய் விட்ட போது, எந்த வலைத்தளங்களில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் இளைஞர் கூட்டம் எழும்பியதோ..அதே தளங்களில் வலை போட்டு தேடியும் கிடைக்காமல் பதுங்கிக்கொண்ட இந்த கிழட்டு ஓநாய் மறுபடியும் ஊளையிட ஆரம்பித்திருக்கிறது..

அன்னா ஹசாரே...நீங்கள் எந்த விதமான போராட்டத்தையும் நாடகத்தையும் நடத்துங்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று மட்டும் கொச்சைப்படுத்தாதிருங்கள். 

வேஷம் களைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது அன்னா ஹசாரே..கிளம்புங்கள்.

பாஜக ஸ்லீப்பர் செல் 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...