மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

மோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்

அடிமையின் வாக்கல்ல இது;
கடைந்தெடுத்த அரசியல்வாதியின் 
கயவாளித்தனம்..!!

தன்மானத்தமிழனை தலை நிமிரச்செய்த போது ..

மோடி சொன்னதால்தான் அதிமுகவில் இணைந்தேன் என்று பன்னீர்செல்வம் கூறியது பரவலாக தமிழகம் முழுவதும் சந்தி சிரித்தாலும் இப்போது அதை வேறு விதமாகவே அணுக வேண்டியுள்ளது.

காரணம்,  அவர் சொல்லியிருக்கும் நேரமும் அதிமுக தலைவர்களுக்குள்ளாகவே வெளிப்படையான மாறுபட்ட கருத்துக்களும், திரு.ஜெயக்குமார் அவர்களின் மிகக்  காட்டமான சமீபத்திய  பேட்டிகளும் ஒரு புள்ளியை மையப்படுத்தினது. அவைகள் வெவ்வேறு குரல்கள் இல்லை என்பதை காலம் சீக்கிரத்தில் உணர்த்தும்.

அவர்களை இணைத்திருக்கும்  அந்தப் புள்ளி "ஆபரேஷன் தமிழ்நாடு"திட்டத்தின் மற்றொரு அத்தியாயம்..!!! 

ஆர்கே நகரில் தினகரனுக்கு விழுந்த வாக்குகள் பணத்திற்கானது மட்டுமே இல்லை என்பது ஊரறிந்தது. மோடியை அல்லது பாஜகவை அடியோடு வெறுத்த மக்களின் கோபமும் சேர்த்தே தான் அத்தகைய வெற்றியைத் தேடித்தந்தது. அன்றைய பொழுதில் தினகரன் பாஜக எதிர்ப்பு முகமாகவே பார்க்கப் பட்டார். 

இன்றைக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு என்பது வாக்குகளைத் தேடித்தரும் என்பதை அவர்களின் கூட்டணிக் கட்சிகளே உணர தொடங்கியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, தெலுங்கு தேசம்  போன்ற மாநிலங்களில் பாஜக  எதிர்ப்புக் குரல்கள் வழுத்துக் கொண்டிருக்கின்றன. 

தமிழகத்திலும் அதன் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை. 2019 பாராளுமன்ற தேர்தலில் எப்படியாயினும் வாக்குகளைப் பெற்று சில இடங்களை வென்ற பின் பாஜகவுக்கு ஆதரவளித்து, அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து மீண்டும் இதே வாக்கியத்தை  சொல்வார்கள்....

மோடி சொன்னதால்தான் இணைந்தோம்..

தமிழகமே ஜாக்கிரதை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...