மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ஆபரேஷன் தமிழ்நாடு?

சோழியன் குடுமி சும்மா ஆடாது மிகப்பெரிய பொய்யை மிகச் சாதாரணமாக சொல்வதும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதும்  ஆரியனின் இயல்பு என்பதே ஈராயிரம் ஆண்டு வரலாறு. வரலாற்றை எத்தனைதான் திரித்து ஓதினாலும், உண்மைகளும் தொடர்ந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளது.

இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதின்  நோக்கமே   நம் பங்குக்கு நாம் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும் என்பதால் தான். தமிழகம் நாளை இன்னொரு உத்திரப்பிரதேசமாகவோ குஜராத்தாகவோ மாறக்கூடாதென்பதற்காக எம்மால் இயன்ற விழிப்பைச்  செய்ய எத்தனிக்கிறோம்.

கடந்த சமீப காலங்களாக, அதுவும் ஆர்கே நகரில் நோட்டாவுக்கும் கீழே மண்ணைக்கவ்விய பின் காவிகளின் போக்கில் ஒரு ஆக்ரோஷமான  வித்தியாசம் உண்டு. 

எச் ராஜா என்பவர் எப்போதுமே தன்னுடைய தரத்தில் பேசுகிறார் என்பதால் கண்டுகொள்ளத்  தேவையில்லை. அவர் அப்படி பேசுவதுதான் மக்கள் இன்னமும் துரத்தியடிக்கத் தேவையானதும் கூட.

ஆனால், ஜீயரின் சோடா பாட்டில் வசனம், நயினார் நாகேந்திரனின் தலைக்குப் பரிசு அறிவிப்பு, தொலைக்காட்சி விவாதங்களில் விமரிசகர், பாஜக ஆதரவாளர், நிபுணர் என்ற பெயர்களில் கலந்து கொள்ளும் அம்பிகள் மற்றும் அடிவருடிகளின் மொக்கத்தனமான கூச்சல்களும் மட்டுமல்லாது, தந்தி டிவி பாண்டே போன்றோரின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்னமும் நூதனமான பிரச்சாரமே.

திருச்சி வேலுச்சாமி என்பவர்  கடந்த மக்கள் மன்றத்தில் பேசும்போது இந்தியா பாகிஸ்தான் போரில் தன்  உயிரை ஈந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு இஸ்லாமிய போர் வீரனைப் பற்றி பேசும்போது குறுக்கிட்ட பாண்டே, "அவர் ஒரு இஸ்லாமியரா இந்தியரா" என்று நல்லவனை போல விஷத்தைக் கக்குகிறார்.

இஸ்லாமியர்கள்  எல்லாரும் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று மூலைக்கு மூலை காவிகள் கொக்கரித்ததை அவர்கள் இந்தியர்கள்தானே என்று பாண்டே போன்றவர்கள் அதே மேடையில் ஜீயர் போன்றோர் இருக்கும் பொழுது ஒரு நடுநிலை ஊடகவியலானாக பதிவு செய்யமாட்டார்.

ஏனென்றால் ஆபரேஷன் தமிழ்நாடு திட்டத்தில் அவர் ஒரு மூலைக்கல். எனவே மக்கள் மன்றம் நிகழ்ச்சியை புறக்கணிப்பது பொதுமக்களின் இன்றைய கடமை. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...