மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

காவிரி மேலாண்மை வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிரி மேலாண்மை வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காவிரி எழவு திட்டம்

ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது  நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது.

பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் என்ன சொல்லுவது.. நான் சொல்லுகிறேன், உனக்கு பிச்சை கிடையாது என்று கூறுவார்.

அதே போல் கர்நாடகம் என்ன தண்ணீரை மறுப்பது? நாங்கள் சொல்கிறோம் தண்ணீர் தர முடியாது என்று  தமிழகத்தின் உரிமையான  காவிரியை பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளிவிட்டதுமல்லாமல் இவர்கள் அமைக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான மேலாண்மை அமைப்போ அல்லது வாரியமோ அதன் வரைவு திட்டத்தில் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும், காவிரி அமைப்பு மேற்பார்வை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்று  மத்திய அரசின் சார்பாக நீர்வளத்துறை செயலர் என்று யு.பி.சிங் கூறியுள்ளார். 

இது தமிழகத்திற்கு செய்யப்பட மிகப்பெரிய மோசடி. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தானே மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது? இன்னும்  அவர்கள் அதிகாரத்தில் அணைகள் இருக்குமானால் மறுபடியும் முதலில் இருந்தா?

அது சரி.. தேர்தலும் நடத்தியாகிவிட்டது, ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது, இப்போது கர்நாடக ஆட்சி தானே முக்கியம்...

தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசு இப்போது ஒரேயடியாக நெஞ்சிலே குத்திவிட்டது. அடக்கம் மட்டும் தான் செய்ய வேண்டியுள்ளது.

அதற்குத்தான் காவிரி எழவு திட்டம்.

நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்

வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!!

நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..

நீங்கள் வென்று காட்டினீர்கள் 
நாங்களும் மகிழ்கிறோம் 
ஆனந்தக்  கண்ணீரோடு மட்டுமல்ல  
அந்நிய தேசத்தில் இருந்தாலும் 
என் சொந்த தேசம் 
ஒன்றுபட்டு ஓங்கி நிற்கிறது 
தமிழன்டா என்ற கெத்தோடு கூட 


ஏலே ..வரலாறு பேசும் லே..!!! 

தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழிசை


தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிட தயார்.
தமிழிசை சவால் 

இன்றைய (03.05.2018) செய்தி..! 

பட்டியலில் சில.. 



பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வரைவு அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை 


தமிழகத்தில் நீட் மையம் அமைக்க இயலாது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும்


இதுவும் இன்றைய செய்தி தான்..!!!  



காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்?


திமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது  காவிரி நீரை பெற்றுத்  தரவில்லை? திமுக கபட நாடகம் ஆடுகிறதா? 

...என்று மிக  அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் அடித்து அடித்து ஏற்றிக்   கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒரு மிகவும் எளிமையான ஒரு பார்வை. 

நேர்மையாளனாக சிந்தியுங்கள்.

இப்போது (02.04.2018) எதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது யார்?

உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் ஏன் அமைக்கச் சொன்னது?

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதித்தீர்ப்பு வழங்கியது?

திமுக 1989-1991 ஆட்சியால் 1991 ஜூன் 25ல் 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. (1991 ஜூன் 24ல் ஜெயலலிதா முதல்முறையாக ராஜீவ் மரண அலையில் ஜெயித்து முதல்வராக பதவி ஏற்றார். மறு  நாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

சரி, காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப் பட்டதால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப் பட்டது?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அவர்களால் அமைக்கப் பட்டது.

சரி..இப்போ சொல்லுங்கள். இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது?


ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...