மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

துணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை - ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை



துணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததைப்  பற்றி பயப்பட தேவையில்லை

- ஸ்ரீ லகுட ஸ்ரீ களவாணி எடப்பாடி சாமி 


அதைத்தான் சாமி நாங்களும் கேக்குறோம், பயிற்சின்னா என்ன விதமான பயிற்சி? இலங்கையில் கடைசி யுத்தம் வருவதற்கு முன் நம் கடல் பகுதியில் பல நாடுகள் இந்தியாவோடு  கூட்டுப்பயிற்சி என்ற பெயரில் திட்டம் தீட்டியதை போன்ற பயிற்சியா..இல்லை இலங்கையில் இரணமடு பகுதியில் ராணுவம்  2006ல் நடத்திய ஒத்திகைப் பயிற்சியா?

அது இருக்கட்டும். தமிழர்கள்  எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். 

ஆனால் துணை ராணுவம் வருவது முறைப்படி முதலமைச்சருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லையாமே? இதை விடவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை அவமதிக்க முடியுமா?

ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவும் வராது வந்த மாமணி போல் வந்த  முதலமைச்சர் பதவியில் கூடுமான வரை அனுபவிப்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டீர்கள் சாமி ? 

ஒரே ஒரு வேண்டுகோள்..வள்ளுவன் வாயிலாக.. 

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே 
கெட்டான்  எனப்படுதல் நன்று.

விளக்கம்: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

உண்மையிலேயே சாமியாகிவிடுங்கள் சாமி.





வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்


செய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை "பாஜகவின் கைக்கூலிகள்" என்று கூறியதற்கு கண்டனம் (இணைப்பு)

- அதானே, நாலு மாசம் சம்பள பாக்கி (எனக்கும் சேர்த்து தான்) வைத்திருப்பது தெரியாமல் இன்றைக்கும் கைக்கூலிகள் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?..  

உசிலம்பட்டி வட்டாரங்களில் மரத்தடி நாட்டாமை பஞ்சாயத்துகளில் நடந்த ஒரு  நாட்டாமை தீர்ப்பு "அவன் உன்னை அடிச்சிருக்கலாம் ..அதுக்காக அவரை  போடா ன்னு எப்படி மரியாதை இல்லாம நீ சொல்லலாம்? இருநூறு ரூவா அபராதம் கட்டிட்டு அவரு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு" 

அதே போல, மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தான ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேரணி சென்ற வைக்கோ மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் எச் ராஜா, எஸ்.வி சேகர் போன்ற வெறியர்கள் வன்மமாக, ஆபாசமாகப்  பேசுவது தவறில்லை. 

காவிக்கொடியுடன் வந்து கல்வீசிய அவர்களை பாஜகவின் கைக்கூலிகள் என்று கூறியது தான் தவறு. 









கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. 
ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே 
கருத்துக்கணிப்பு வரும் முன்னே.

இதோ வந்து விட்டது..!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால்  இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.

தொங்கு சட்டசபை அமையும், ஆனாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கேப்பையில் நெய் வடிக்கும் செயலை தொடங்கி விட்டார்கள்.

இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரூ மீடியாவை வைத்து பாஜக குறைந்த  இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் என்று எருமையை ஏரோப்பிளேன் ஓட்ட வைப்பார்கள்.

கடைசியில் அடிமை  தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடும் பாதுகாப்போடும் தங்களுடைய ஓட்டு மெஷினை வைத்து "கேக்குறவன் மட்டுமல்ல .. கேக்காதவனும் கேனையன்" அப்படின்னு வழக்கம் போல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றின்னு கொக்கரிப்பார்கள்.

கர்நாடக மக்கள் வீறு கொண்டு எழுந்து புரட்சி செய்வார்களா? 

ஓட்டு மெஷினில் ஒரு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளுக்கு மட்டுமே மோசடி செய்து வைத்திருப்பார்கள்.  பதிவாகும் வாக்குகளில் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தாமரைக்கு எதிராக விழுந்தால் காவி பூனைக்கு மணி கட்டுவது மட்டுமல்ல வாயில் பசுவின் கோமியத்தையும் வைக்கலாம்.

செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்


மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்
தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்த
ராமனின் ராஜ்யத்தில்
தமிழிசை கூட தப்புமா? - இல்லை 
வானதியும்  தான் வாழமுடியுமா?

இந்துக்களாய்  சேர்வோம்
ராமராஜ்யம் அமைப்போம் - என்று
வீரியம் பேசினவன்
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராக
துப்பாக்கி கொண்டு துரத்தினான்
வீதி வீதியாய் !

சுத்தமில்லை நீ சூத்திரன் என்றான்
சுத்தமில்லாமல் ஒரு சத்தமுமில்லாமல்
கடவுளென்று நீ கருதும் 
கருவறையை பள்ளியறையாய் மாற்றி
கயமைத்தனம் செய்தான் !!

காக்க வேண்டும் கலாச்சாரம் 
காவி தான் ஒரே தேசத்தின் ஆச்சாரம் 
காவல் தெய்வம் என்றான், 
கற்பழிக்கப்பட்டவள் தந்தையை
காவல் நிலையத்தில் கொன்றான் !!!

இத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லை இதுவரை
பத்து லட்ச ரூபாய் கோட்டு  கட்ட  துரை 
இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லி 
இல்லாதவன் பணத்தையெடுத்து 
இருப்பவனிடத்தில் கொடுத்தான் அள்ளி !!!

விழித்துக்கொள் தமிழா இந்துவல்ல நீ 
சூத்திரன் என்று குனியும் நேரம் இதுவல்ல.
வினை செய்,  விளையச் செய்
அழித்து விடும் அதிகாரம் 
எனக்கென்ன என்றிருந்தால்  !!













பூனைக்குட்டி வெளியே வந்ததா? - டிடிவி

பாஜகவின் ஸ்லீப்பர் செல்

அசுர பலத்திலும் அக்கிரம சிந்தையிலும் நிறைந்திருக்கும் மத்திய பாஜக அரசை மிகவும் கூலாக எதிர்கொள்கிறார், இவர்தான் மாவீரன் என்று பாஜக சார்பு ஊடகங்கள் மூலம் கட்டியமைக்கப்பட்ட பிம்பம் தான் இந்த டிடிவி தினகரன் என்று எத்தனை முறை சொன்னாலும் அடங்காத அதிமுகவினர் இன்றைக்கு இலேசாக தலையை சொரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதமரின் தமிழக வருகையை ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, வடமாநிலத்தவரும் கூட இன்னும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ஓட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகள் ஒன்று பாஜக, மற்றொன்று டிடிவி....!!! (எடப்பாடி குரூப் ஏற்கனவே பாஜகவில் அடக்கம்) 

ஜெயாவின் மர்மமான  மறைவிற்கு பின் ஒட்டுமொத்த அதிமுகவும் கிட்டத்தட்ட சிதைந்தடைந்து மாற்றுக்கட்சி தேடத்தொடங்கியபோது  கட்சியை காப்பாற்றுவதற்காக,  ஒட்டு வங்கிக்காக, அவர்களை வைத்து காரியம் சாதிப்பதற்காக  மத்திய பாஜகவினால் திட்டமிட்டு  அதிமுகவுக்கு ஒரு வலுவான தலைவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நடத்தப்பட்ட நாடகத்தின் கதாநாயகன் தான்  இந்த டிடிவி தினகரன்!! . வில்லனாக வேஷம் போட்டவர்கள் தான் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் ..!!

கைது டீலிங் பேசவும்,  சிறையில்  ஒத்திகையும், ரெயிடும் ஊடக வெளிச்சமும் ஆரம்பக் காட்சிகள் என்று திட்டமிட்டபடி நடந்தது.

ஆர்கே நகர் தேர்தலில் முதல் தடவை நடந்த போது பணம் கொடுத்ததற்காக தேர்தலையே நிறுத்தி வைத்த ஆணையம் பின்பு நடந்த தேர்தலில் போத்திக் கொண்டு உறங்கியதற்கு காரணம்  பாஜகவின் ஆணைப்படி டிடிவியை மக்கள் செல்வாக்கு உள்ளவராகக் காண்பிப்பதற்கே..

நேர்மையும் மனச்சாட்ச்சியுமுள்ள நபர்கள் அதிமுகவில் உண்டு. 

அறிந்து கொள்ளுங்கள் இந்த பாஜகவின் ஸ்லீப்பர் செல்லை.







ஒரே வாரத்தில் 8,50,000 கழிப்பறைகள்..!

அண்டப்புளுகு ஆகாசப்புளுகெல்லாம்
ஓபிஎஸ் இபிஎஸ்  போன்று, 
இரண்டும்  இவர் கால் தூசு போன்று.

ஒரு வாரத்தில் எட்டரை லட்சம் கழிவறை
ஆரவாரத்தில்  அவாள் கூட்டம் அலப்பறை 
எப்படிடா சாத்தியம் அருவருப்பின் மொத்தமே
கப்படிக்கும் நாற்றமடா கருநாகம் உன் சத்தமே

ஓரடிக்கு ஓரடி கட்டினாலும் ஓராயிரம் கூடி நின்றாலும்
கணக்கு உதைக்குதடா தள்ளுபடியான கடன் போல
கட்சிக்கு வந்த ஆயிரம் கோடி  நிதி போல

பதவிக்கு வந்தால் பதினைந்து லட்சம்
முதலாண்டு முடிந்தால் ஒரு கோடி வேலை
கறுப்புப்பணம் மீட்க பணமதிப்பிழப்பு 
காவிரியில் எங்களுக்கு கழுத்தறுப்பு

பொய்யுரை நம்பலாம் வடநாட்டில்
மயிரத்தான் மலரும்  எம் தமிழ்நாட்டில்






சமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு


மவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம்.  அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். 

ஆனால்,  ஒரு நடிகனின் அடிப்படை அரசியல் அறிவும்,  தமிழ் சமூகம் சந்திக்கும் எந்தப் பிரச்சினையும்  குறித்தான அவனது பார்வையும் அணுகுமுறையும் எந்த அளவுக்கு பெலவீனமானது என்பது மட்டுமல்லாமல் எவ்வளவு ஆபத்தானது போன்றவை அவ்வப்போது சில  நடிகர்கள் மூலம் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் மேலாக,  கிட்டத்தட்ட ஒரு மனநிலை சரியில்லாத மனிதனா இல்லை இவனுக்கு தெரிந்ததே இவ்வளவு தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு  நேற்றைய  பிரபல விரல்வித்தை நாயகனும் பரம்பரை சொடக்கு போடும் வல்லுநருமாகிய சிம்பு என்ற அறிவாளி பேசுவதை பார்க்க வேண்டிய அவலத்தை அவனிடம் மைக்கை நீட்டிய ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டது.

பிரபலம் என்பதற்காக இப்படியா ஒரு குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத நபரிடம் மைக்கை நீட்டுவீர்கள்?

நதி நீர் பங்கீடு குறித்த சர்வ தேச சட்டம் கிலோ என்ன விலைன்னு தெரியுமா? காவிரி பிரச்சினை பற்றிய ஒரு சதவீத அறிவு இல்லாமல் இருக்கும் அவன் பேசலாம்..நீங்கள் மைக்கை நீட்டலாமா?

அன்பா கேட்கணும்னு சொல்லிட்டு ஊடகங்களை "அடி ரா"  என்று துரத்திவிட்டான் பார்த்தீர்களா?

கேனப்பய ஊருக்குள்ள கிறுக்குப் பய நாட்டாமை.



காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்?


திமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது  காவிரி நீரை பெற்றுத்  தரவில்லை? திமுக கபட நாடகம் ஆடுகிறதா? 

...என்று மிக  அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் அடித்து அடித்து ஏற்றிக்   கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒரு மிகவும் எளிமையான ஒரு பார்வை. 

நேர்மையாளனாக சிந்தியுங்கள்.

இப்போது (02.04.2018) எதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது யார்?

உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் ஏன் அமைக்கச் சொன்னது?

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதித்தீர்ப்பு வழங்கியது?

திமுக 1989-1991 ஆட்சியால் 1991 ஜூன் 25ல் 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. (1991 ஜூன் 24ல் ஜெயலலிதா முதல்முறையாக ராஜீவ் மரண அலையில் ஜெயித்து முதல்வராக பதவி ஏற்றார். மறு  நாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

சரி, காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப் பட்டதால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப் பட்டது?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அவர்களால் அமைக்கப் பட்டது.

சரி..இப்போ சொல்லுங்கள். இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது?


ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...