மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

வட போச்சே..!

பிரவீன் தொகாடியா போன்ற பிரபலமானவரை 'இந்துத்துவா தலைவர் மாயம்' என்று பொத்தாம் பொதுவாக தினமலர் செய்தி வெளியிட்ட போதே சந்தேகம் இருந்தது. 


இன்றைய தொகாடியாவின் பேட்டியில் அவர் கூறும்போது  "இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது இந்த குரலை ஒடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. என் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன. எனது குரலை ஒடுக்குவதற்காக என்னை கைது செய்ய பல மாநிலங்களில் முயற்சிகளில் மேற்கொள்ளப்படுகின்றன." என்ற வார்த்தைகளில் விஷமத்தனம் இல்லாமல் இல்லை.


 நான்கு நீதிபதிகளும் வெளியே வந்து தோலுரித்த பின்,  தமிழக ஊடகங்கள் மற்றும் மணிக்கொரு தடவை விவாதம் நடத்தும் காட்சி ஊடகங்கள்   தங்களுடைய எஜமான் விசுவாசத்தினால் 'அனைத்தையும்' மூடிக்கொண்டாலும் வடநாட்டு ஊடகங்களில்  மிக வலுவாகவே பேசப்பட்டதினால் அதுவும் அடிவருடி ரிபப்ளிக் டிவி  எத்தனை தான் புலனாய்வுத்திறமையை காண்பித்து முட்டுக்கொடுத்தும்  கூட ஆளும் தரப்பு ஆடிப் போயி இருந்ததை டெல்லி வட்டாரங்கள் இரண்டு நாளைக்கு முன்பே தெரிவித்தன.

ஏதோ  அசம்பாவிதம் அல்லது திசைதிருப்பல் நாடகம் அரங்கேற்ற இருந்ததை எம்மால் யூகிக்க முடிந்தது. அது தோல்வியடைந்ததா அல்லது இனிமேல் தான் நாடகத்தின் முக்கியப்பகுதி இருக்கிறதா என்பதை இரண்டொரு நாட்களில் காவிச்சார்பு ஊடகத் திரையில் காணலாம். 

இப்போதும் தொகாடியாவின் கருத்தைக் கவனியுங்கள் "இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல்" போன்றவை ஏதோ மிக சமீபமான எதிர்காலத் திட்டத்தை உணர்த்துவதாக இல்லை?கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...