மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

அரசியல்வாதி ரஜினியின் அப்டேட்

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த இடத்தில் ரஜினியின் வீட்டிற்கு வெளியே இரண்டு நாளாய் காத்துக் கிடந்து மயங்கி கிடந்த ரசிகக்குஞ்சு ஒருவரை "தெளிய வைத்து" விட்டு  அவரிடம்,  தலைவர் எப்போ வருவார் என்று கேட்கவும், தலைவர் ஏற்கனவே இருநூத்தி முப்பத்து நாலு தொகுதியிலும்....என்றவரை இடைமறித்து அட..ச்ச் சீ..எப்பய்யா வீட்டை விட்டு வெளிய வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே நீண்ட உறக்கத்துக்குப் பின் (தியானம் என்றும் அரை ட்ரவுசர்கள் சொல்வார்கள்) ஆன்மீக அரசியல்வாதி வந்தார்.

அவரிடம் நாம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் "நான் ஒரு தடவ சொன்னா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன மாதிரி" என்று கேட்க சொல்லி கையை ஸ்டைலாக அசைக்க..நாம் தொடர்ந்தோம்.

"ஐயா, இந்த ஆண்டாள் பற்றி உங்க திரைத்துறையை சேர்ந்த வைரமுத்து சொன்னது  குறித்து  உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

 "இந்த எச்.ராஜா அவர்களின் ஆன்மீகத் தனமான  அமைதியான  பதிலடி மேடைப்பேச்சு பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"தேசபக்தர்களின் சமீபத்திய அட்ராஸிட்டி  பற்றி?"

"நெக்ஸ்ட்"

"ஆண்டாள் பற்றி உங்கள் கருத்து?"

"நெக்ஸ்ட்"

"ஐயா ..இந்த தேவதாசி...அப்படீன்னு ..?"

(ஒருவித புன்முறுவலுடன்) "நெக்ஸ்ட்"

"ஆன்மீக அரசியல்வாதியான உங்களின் கருத்து ரொம்ப முக்கியம் ஐயா"

"வேற எதுவும் கேள்வி இருக்கா?"

"இல்ல.." (நீங்க வாய தொறந்தாதானே?)

"கண்ணா...கீழே பாரு..ஹா..ஹா..ஹா.."




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...