மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு

ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல. 

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.

அதன் பின்னணியிலேயே  தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.
படம் நன்றி: தந்தி டிவி 
ரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.

அமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய  பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது. 

ஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது. 

எடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.

இனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...