மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

அப்பா எங்கே?

அப்பா எங்கே?
நிற்க இடமில்லாமல் 
நீண்ட  ரயில் பயணம் 
கால்கடுக்க நின்று
கால் இடுக்கில் கிடைத்த 
காலடி இடத்தையும் கொடுத்து 
கண்விழித்து 
கலங்காத ராசா என்று 
தட்டிக்கொடுத்து 
நன்றாய் எழுது 
நாளைய தேர்வில் வெல்லு 
நமக்காகும்  நாளை என்றவர்  
என்னையும் கனவையும் 
தன் நெஞ்சில் தாங்கி 
இங்கு தான் எங்கோ நிற்கிறார் 
எழுதிவிட்டேன் நன்றாய் 
என்று சொல்லி மகிழ 
என் அப்பா எங்கே?12 கருத்துகள்:

 1. அந்த சிறுவனின் மனநிலை என்னாகுமோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே மனநிலையில் என்னை வைத்து பார்க்கிறேன் சகோதரி

   நீக்கு
 2. பதில்கள்
  1. அந்த சிறுவன் தேர்வில் வெற்றி பெறுவதே ஆறுதலாக இருக்கும் நண்பரே

   நீக்கு
 3. மனம் மிகவும் கொதித்து போய் கிடக்கிறது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே..!! என்று தீரும் நம் இனத்தின் மீதான தீமையின் கோரப்பிடி.!! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. ரமேஷ் அவர்களே. !!

   நீக்கு
 5. I am not able to post comments in tamil. However, I could write in the blog but not in "comments". Could you help me find the chrome ext. that will work type in tamil like blog post?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://www.tamiltyping.in நான் இது போன்ற தளங்களில் டைப் செய்து காபி பேஸ்ட் செய்வதுண்டு நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள் !!!

   நீக்கு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...