மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது  வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?
அதனால் உமது பேட்டியிலிருந்தே சில கேள்விகள் .. 

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தபின்புதான் கலவரம் உருவாகியதென்று நேரில் பார்த்தவரைப்போல் அறுதியிட்டு கூறுகிறீர் ..
சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததால் காவலர்களுக்கு கோபம் வந்து பொது மக்களை சுட்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்? 

சமூக விரோதிகள், காவலர்களை அடிப்பதற்கு பதில் நேரடியாகவே மக்களை அடித்திருக்கலாம் தானே..கலைஞர் கைது சம்பவத்திற்கு பின்பு நடந்த பேரணியில் ஜெயலலிதா அப்படித்தானே அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்?

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தால் அவர்களைத்தானே சுடவேண்டும்? செத்தது சமூக விரோதிகளா? 

ஆம் என்றால் சமூக விரோதிகள் செத்ததற்கு நீர் ஏன் 'சுட்டது காட்டுமிராண்டித்தனம்'  என்று போனவாரம் பினாத்தினீர்? 

ஐயா.. உச்ச நடிகரே சில வார்த்தைகள்  உங்களுக்கு ...எங்கள் ஐயன் வள்ளுவன் வாயிலாக..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 
நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும் 
இனம்போலவே இருந்து உண்மையில் இனமல்லாதவரின் நட்பு பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் 

இணையதளம் பக்கம் சற்று எட்டிப்பாரும் எம் தமிழக மக்கள் உமது பேச்சுக்கான  எதிர்வினையை 
"செய்து" இருக்கிறார்கள். அறிந்து கொள்வீர் நீர் எமக்கு யாரென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...