மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

நன்றி எச்ச..

காலி பண்ணிட்டீயே எச்ச ..அவ்வ்வ் 
கெட்டவர்கள் மூலமாகவும் சில சமயம் நல்லவைகள் நடப்பதுண்டு. 

அந்த வகையில், தமிழகத்திற்குப் பிழைக்க வந்து இன்றைக்கு தமிழக மக்களுக்கு  குறிப்பாக இளைஞர்களுக்கு  தமிழுணர்வையும் ஒற்றுமையையும்   தூண்டும் சக்தியாக தன்னையுமறியாமல் சதா உழைத்துக் கொண்டிருக்கும் "எச்ச" என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப் படும் திரு எச்.ராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல காரணம் உண்டு.

1. முன் தீர்மானிக்கப்பட்டு கூட்டப்பட்ட கூட்டத்தில்   திடீரென்று எம்ஜிஆர் பக்தனாக வேஷம் போட்ட  ஆன்மீக அரசியல்வாதியும் அவரின் நல்லாட்சி தந்திரமும்  பரபரப்பில்லாமல்  போய்விட்டது.

2. தமிழர்கள் சாதி, மதம், கட்சி, வயது வித்தியாசமில்லாமல் பாஜகவை நோக்கி கல்லெறியத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 2019 பாராளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வந்து விட்டது. 

நன்றி எச்ச...!

பின்  குறிப்பு: பெரியார் சிலையை நீ மட்டுமல்ல..வங்கியில்  கொள்ளையடித்தும், மோடியின் துணையோடு ஒரே வருடத்தில் 92000 கோடி வருமானம் பெருக்கியுமுள்ள பாஜகவின் பைனான்சியரான அதானியே  வந்தாலும் முடியாது. (உன் குடும்பத்துல உள்ள எல்லோர் பெயரையும் தமிழக மக்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஒரு சங்குக்கு ...சாரி.. சேஞ்சுக்கு அதானி)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...