மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

நெசம்மாவே நடந்திருச்சா எடியூரப்பா

நாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (?) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா?

பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்சிக்கு பின்னாலே குத்திட்டாங்களே குருநாதா...

அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே ...(பின்னணி இசை)


 ..மாட்டுக்குள்ளதையும் மனுஷனுக்குள்ளதையும்  சேர்த்து  வச்சி பூசிட்டாங்களே..!
மேகலாயாவுலயும் கோவாவுலயும் செஞ்சத பார்த்து இப்படி செஞ்சுப்புட்டாங்களே ...
பதவியேற்குமிடத்துக்கு குடுத்த அட்வான்ஸ எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு திருப்பி கேப்பேன்?

அந்த குமாரு பயபுள்ள நல்லா இருப்பானா..
நான் கொடுப்பேனடா எத்தனை கோடின்னாலும் ..நம்ம ரெட்டி காரு கொடுப்பாரேடா கொமாரு நீ நல்லா இருப்பியா?

காவிரி தண்ணிய தராம இருக்க வரைவு திட்டம் செஞ்சோமடா  பாவி இப்போ என் எங்க கண்ணுல தண்ணிய வர வச்சி பிளான் பி திட்டத்தை செஞ்சுப்புட்டாங்களே கொமாரு ...

ஆமா ஓட்டு மெஷின்ல அந்தக் குத்து குத்தியுமா நாங்க தோத்துட்டோம்? கள்ளத்தனம் செய்யாம இருந்திருந்தா இந்நேரம் நாறியில்ல போயிருக்கும்..

2 கருத்துகள்:

 1. நாறிடுச்சா...? உங்கள் வாக்கு பலிக்குதே...

  நண்பா என்னை முதவராக ஆயிடுவேன்னு உங்க வாயால சபிங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா.. ஆனா மறுபடியும் கவர்னரை வச்சி தமிழ்நாட்டில் செய்தது போல இனி எப்படியும் அஞ்சி வருஷத்த ஓட்டாம விட மாட்டார்கள் போல் தெரிகிறதே நண்பரே..

   நீக்கு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...