மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

நீட் எனும் மோசடி


ஆச்சரியம் என்னவென்றால், தலைக்கு 15 லட்சம் டெபாசிட் தொடங்கி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பர்மாவில் நூறு தீவிரவாதிகள் சுட்டதாக பீலா, கறுப்பு பணம் மீட்பு, தேர்தல் கமிஷன், நீதித்துறை, பணமதிப்பிழப்பில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பணத்தை எண்ணிக்கொண்டே இருப்பது,  பின்வாசல் வழி ஆட்சி, கவர்னர் ஆட்சி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் குறித்த நீதிமன்ற வேஷங்கள் என்று விடிந்தது முதல் அடையும் வரை ஓயாமல் அண்டப்புளுகு புளுகிக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வில் மட்டும் நியாயமாகவா நடந்து கொள்ளும்?

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருப்பதால் தான் வேண்டாம் என்கிறார்கள். இன்னும் சிலர் மாநில பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எந்த பாடத்திட்டத்தில் இருந்தாலும் நீட் தேர்வு என்பதே மோசடி செய்யத்தான்  கொண்டு வருகிறார்கள் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

இந்த வருட தேர்வு முடிவுகளில்  உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் தமிழகத்தை விட மிக அதிக தேர்ச்சி விகிதத்தை கங்கையில் மிதக்கும் சடலம் கூட நம்பாது.

குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று சொல்லி பைனான்ஸ் கம்பெனிகள் பணத்தை உருவிக்கொண்டு ஓடியதைப்போல தரமான மருத்துவர்கள் என்று சொல்லி தலையில் நீட் எனும் மிளகாயை அரைத்து விட்டார்கள்.

உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பைக்கொண்ட தமிழகத்தில் நீட் எனும் பெயரால் வடமாநிலத்தவர் பயன்படுத்திக்கொள்ளவே இந்த நீட்  தேர்வு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

நீ அரிசி கொண்டு வா 
நான் உமி கொண்டு வாரேன்  
ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் 

என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...