துணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததைப் பற்றி பயப்பட தேவையில்லை
- ஸ்ரீ லகுட ஸ்ரீ களவாணி எடப்பாடி சாமி
அதைத்தான் சாமி நாங்களும் கேக்குறோம், பயிற்சின்னா என்ன விதமான பயிற்சி? இலங்கையில் கடைசி யுத்தம் வருவதற்கு முன் நம் கடல் பகுதியில் பல நாடுகள் இந்தியாவோடு கூட்டுப்பயிற்சி என்ற பெயரில் திட்டம் தீட்டியதை போன்ற பயிற்சியா..இல்லை இலங்கையில் இரணமடு பகுதியில் ராணுவம் 2006ல் நடத்திய ஒத்திகைப் பயிற்சியா?
அது இருக்கட்டும். தமிழர்கள் எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால் துணை ராணுவம் வருவது முறைப்படி முதலமைச்சருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லையாமே? இதை விடவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை அவமதிக்க முடியுமா?
ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவும் வராது வந்த மாமணி போல் வந்த முதலமைச்சர் பதவியில் கூடுமான வரை அனுபவிப்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டீர்கள் சாமி ?
ஒரே ஒரு வேண்டுகோள்..வள்ளுவன் வாயிலாக..
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
விளக்கம்: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
உண்மையிலேயே சாமியாகிவிடுங்கள் சாமி.