கல்லுளி மங்கன்

தலைவர் ஒருதடவ கூட..

'டமிலர்'களை நல்லா வாழ வைக்க லேட்டஸ்டா வந்த வர்ணாசிரமப் புலி 

அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வராமலே அவரு காவிரில என்ன சொன்னாரு ஈழத்தமிழர் களுக்கு என்ன கதைச்சாருன்னு எப்புடி கேட்க முடியும்னு முட்டுக் கொடுத்த குடுமி கூட்டத்தை சேர்ந்த அறிவாளிகள்  பாண்டேக்கள்  மணியன்கள் போன்றோரின் முகத்துல சாணியடிச்ச மாதிரி நம்ம தலைவர்..அதாங்க கண்டக்டரா இருந்த எனக்கு  ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த 'டமிலர்'களை  வாழ வைக்கணும்னு மலேசியா தமிழர்ட்ட பிச்சை எடுத்தப்ப சொன்னாருல்ல அவரு தான்...

கடந்த எட்டு நாளா தங்களோட எதிர்காலத்துக்காக தங்களோட சம்பளத்துல இருந்து பிடித்தம் செய்த பணத்தை கொடுங்கன்னு குடும்பத்தோட நடு ரோட்டுல நின்னப்ப, அவரு ஏற்கனவே சொன்ன "சிஸ்டம் சரியில்ல"ங்கிற வார்த்தையைக் கூட சொல்லாம தலைமறைவாயிட்டாரு நாளைய முதல்வர். (எதுக்கு முதல்வர்னு கேட்கக்கூடாது..அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுவேன்)

வெறும் "வாயை "மட்டுமே வச்சி பொழப்பு நடத்துறவங்கள பார்த்திருக்கோம். இவரு வாயைக்கூட திறக்காம ஸ்ட்ரெயிட்டா முதலமைச்சரா கனவு கண்டுட்டு சிஸ்டம் வாங்க சாமியார்களை தேடி போயிட்டாரு அரசியல் வாதி ரஜினி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக