சிவசேனா-பாஜக முறிவல்ல..தற்காலிகப் பிரிவு !

சில மாதங்களாக வெளிப்படையாகவே இருந்த கிச்சு கிச்சு ஊடல் தற்போது எதிர்பார்த்தபடி வெளிப்படையாக கூட்டணி முறிவு என்று அறிவித்திருக்கிறார்கள். 
பீகாரைப்போல...இங்கேயும் 
ஆனால் பீகாரின் நித்திஷ் குமார் - பாஜக கூட்டணி செய்த மக்கள் துரோகத்தைப் போல இங்கேயும் நடக்காது என்று மராட்டியர்கள் நம்புவார்களா என்ன?

ஆளும் கட்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜகவின் மிகப்பெரிய தோல்வி திட்டங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றிற்கெதிரான ஓட்டுக்களை பிரித்து எப்படியாவது சில சீட்டுக்களை பெற்ற பின் மீண்டும் ஊடல்..கூடல்..தேனிலவு..உறவு..என்று ஒரே அமர்க்களம் பண்ண எண்ணம் தான்.

ஆனால் மராட்டியர்கள் பீகாரிகளல்ல. சேர்ந்து வந்தாலும் தனித்தனியா வந்தாலும் இந்த முறை கூர் சீவப்பட்டு ரெடியாக உள்ளது என்றே மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

-நமது சிறப்பு நிருபர். (தினமலர்க்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன?)













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக