மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்

ஆஸ்திரேலியாக்காரன் கேட்க கேட்க கொடுத்த வள்ளல் 
கேளுங்க மக்களே.. கேட்காம இருந்தா எப்படி கொடுப்பது? நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது?

காவிரி மேலாண்மை வாரிய திட்ட வரைவை சமர்ப்பிக்க நீங்க எத்தனை தடவை தவணை கேட்டபோதும் தந்தேன்ல..

லோயா வழக்கு, நீட், அமித்ஷா வழக்குன்னு நீங்க கேட்ட ஏதாவது மறுத்திருக்கேனா மக்களே?

காங்கிரஸ் காரன் நம்ம ஆளுநருக்கெதிரா இங்க வந்தாலும் ஆட்சியமைக்க உங்களை  கூப்பிட்டது தான் சரின்னு சொல்லுவோம்னு தெரியாதா மக்களே? 

ஆட்சியமைக்க ஒருவாரம் கொடுங்கன்னு கேட்டாத்தானே ரெண்டு வாரம் கொடுக்க முடியும்? கேக்கலேன்னா எப்படி?

பதவியேற்பதற்கு முன்னமே வேறு கட்சிக்கு மாறிக்கலாம்னு சொன்னாத்தானே கேட்டுக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க முடியும்? கேக்கலேன்னா எப்படி? 

கேளுங்க மக்களே..நான் வேற நீங்க வேறயா? சட்டத்தின்படி நடக்கவா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம்?


2 கருத்துகள்:

  1. கேக்குறோம் கேக்குறோம் கேனயன் மாதிரி இன்னும் நாலு தலைமுறைக்கு கேக்குறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே நண்பரே.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவார்கள்?

      நீக்கு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...