காவிரி எழவு திட்டம்

ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது  நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது.

பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் என்ன சொல்லுவது.. நான் சொல்லுகிறேன், உனக்கு பிச்சை கிடையாது என்று கூறுவார்.

அதே போல் கர்நாடகம் என்ன தண்ணீரை மறுப்பது? நாங்கள் சொல்கிறோம் தண்ணீர் தர முடியாது என்று  தமிழகத்தின் உரிமையான  காவிரியை பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளிவிட்டதுமல்லாமல் இவர்கள் அமைக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான மேலாண்மை அமைப்போ அல்லது வாரியமோ அதன் வரைவு திட்டத்தில் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும், காவிரி அமைப்பு மேற்பார்வை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்று  மத்திய அரசின் சார்பாக நீர்வளத்துறை செயலர் என்று யு.பி.சிங் கூறியுள்ளார். 

இது தமிழகத்திற்கு செய்யப்பட மிகப்பெரிய மோசடி. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தானே மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது? இன்னும்  அவர்கள் அதிகாரத்தில் அணைகள் இருக்குமானால் மறுபடியும் முதலில் இருந்தா?

அது சரி.. தேர்தலும் நடத்தியாகிவிட்டது, ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது, இப்போது கர்நாடக ஆட்சி தானே முக்கியம்...

தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசு இப்போது ஒரேயடியாக நெஞ்சிலே குத்திவிட்டது. அடக்கம் மட்டும் தான் செய்ய வேண்டியுள்ளது.

அதற்குத்தான் காவிரி எழவு திட்டம்.

4 கருத்துகள்:

  1. பொருத்தமான நகைச்சுவையை சொன்னீர்கள் நண்பரே இந்த நகைச்சுவை முதலில் வந்தது மலையாளப் படத்தில்.

    தேர்தல் வரும்போதாவது பார்ப்போம் தமிழர்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... முதலில் மலையாளப்படத்தில் தான் வந்ததா? தேர்தல் காலங்களில் தமிழர்களின் உணர்வுகளை மடை மாற்றவும் சில பேர் புதிதாக அரசியலுக்கு வந்துவிட்டார்களே..

      நீக்கு
  2. காலம் ஒரு நாள் மாறும்... மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார் ஆம் நிச்சயம் மாறும் என்பதே மாற்றம் கண்ட வரலாறு சொல்லும் சேதி

      நீக்கு