மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் மோடி


4 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு உதவினோம்.. பாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல்! பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. 

இந்த முறைகேட்டில் பாஜக கட்சிதான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. 

அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. 

இதே சமயத்தில் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது. 

இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை - ஜீயர்

ஆம் ..அர்ஜுன் சம்பத் என்ற இந்துவை ஆண்டாள் கோயில் ஜீயராக்க எதிரியே இருக்க மாட்டான். 


விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ய ரதயாத்திரை வரவேற்பு கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் இந்துக்கள் ஒன்றுபட்டால் இந்துக்களை எதிர்க்க யாராலும் முடியாது என்று பேசியுள்ளார். (செய்தி இணைப்பு)


இந்துக்களாய் ஒன்றுபட்டு....

திருவரங்கம் கோயிலில் பார்ப்பான் அல்லாத இந்துவை பூஜாரியாக்குவோம். எதிர்ப்பே  இருக்காது...சோடா பாட்டில் வீசப்படாது.!

அர்ஜுன் சம்பத் மற்றும் லேட்டஸ்ட் "பொட்டை புகழ்" தங்க வெங்கடேஷ் போன்ற சூத்திர இந்துக்களை சங்கராச்சாரியார் என்ற இந்துவின் பக்கத்தில்  சுப்பிரமணியன் சாமி என்ற இந்துவைப்போலவே சரிசமமாக அமர வைப்போம்..எதிர்ப்பே  இருக்காது.சோடா பாட்டில் வீசப்படாது.!!

அப்படித்தானே ஜீயர் ..? 


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர யாகம்


ரவிசங்கர் என்ற சாமியாரின் ஆலோசனைப்படி  ராஷ்ட்ரிய ரக்ஷா மகா யாகம் செய்தி இணைப்பு என்ற யாகத்தை கடந்த மாதம் உள்துறை அமைச்சர் கொடியேற்றி  தொடங்கி வைத்து, இப்பொழுது  (18.03.2018 முதல் 25.03.2018 வரை) டில்லி செங்கோட்டை மைதானத்தில் அரசு செலவில் மகா யாகம் நடந்து கொண்டிருக்கிறது.

108 வேள்வி குண்டங்கள், 2100 புரோகிதர்கள் மற்றும் 51000 மந்திரம் ஓதக்கூடியவர்கள் என்று கிட்டத்தட்ட டில்லி செங்கோட்டை மைதானத்தையே ஒரு பூஜை நகரமாக மாற்றியிருக்கிறார்கள். 

அதானியை எப்படியாவது உலகத்துலேயே பெரிய பணக்காரனாக்கிவிடணும் 

தன்னை எதிப்பவர்களை தன்பக்கம் திருப்பவும் , எதிர் பேசுவோரை ஊமையாக்கவும்,  தோல்வி முகத்தை வெற்றியாக்கவும்  எதிரிகளை அழிக்கவும் அவர்களை தோல்வி பெறச்செய்யவும்  உதவி செய்வதாக இந்துக்களால் நம்பப்படக்கூடிய  பாகல முகி என்ற தேவதையை பிரியப்படுத்த இவ்வாறு செய்து மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று யாகம் செய்கிறார். 

இப்போ நம்ம சந்தேகம் என்னவெனில், தேவி உதவுவாளென்றால்...

"பலத்த மீடியாக்கள்
அமர்த்தப்பட்ட ஆன்லைன் அடிமைகள் ஆள்பிடிக்கும் கூட்டம் 
எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் திட்டம்
மின்னணு வாக்கு எந்திரம் 
தேர்தல் ஆணையம் 
காவி  நீதிபதிகள் 
கவர்னர்கள் 
தமிழ்நாடு போன்ற டயர் சுத்தம் செய்பவர்கள் 
கலவரம் தூண்டும் எச்ச கள் 
களத்தில் கலவரம் செய்யும் சூத்திர அடிமைகள்" 

என்று இத்தனையும் விட வேண்டாம்..மின்னணு வாக்கு எந்திரத்தை மட்டும் வாக்கு சீட்டாக மாற்ற முன்வருவீர்களா..?

தேவியால் முடியாதென்று இத்தனை "கள்" பயன்படுத்துகிறீர்களா..? அல்லது  தேவிக்கும் இத்தனை "கள்" உதவிக்கு  தேவைப்படுகிறதா..?

அல்லது.. இத்தனை 'கள் ' இருந்தும் அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் பற்றாக்குறைக்கு தேவியிடம் கோரிக்கையா..? 

சரி..ஒருவேளை அப்படியும் அடுத்த தேர்தலில்  போனால் கிறிஸ்தவ பாதிரிகளையும் சர்ச்களையும் உடைக்கும் நீங்கள் தேவியை உடைத்து எறிவீர்களா..?   


 



முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்

நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை..!!

இன்னும் முக்கல..
தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன்மீக வியாதி ரஜினிதொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நிருபர்களை சந்தித்த ஆன்மீக வியாதி ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார். செய்தி இணைப்பு

இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லையென்றால், போன வாரம் எம்ஜிஆர் ஆட்சி என்னால் தர முடியும்னு உதார் விட்டது எந்த வகை? 

கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து கருத்துக் கேட்ட போதும் ஓடினீரே..அரசியல்வாதியாக அல்ல ஒரு சராசரி மனிதனாக கருத்துச்  சொல்ல மனித நேயம் போதுமே? அது கூடவா இல்லாத ஆன்மிகம் இருக்கிறது முதல்வர் கனவில் மிதக்கும் உமக்கு?

குரங்கணி காட்டுத்தீயில் கருகி விட்ட  "டமிலர்" களுக்கு இரங்கல் ட்வீட்  கூட தெரிவிக்க முடியாத  அரசியல் பயணத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் பாஜக முன்னாள் முதல்வர் பிரேம் குமாருடன் நித்தியானந்தா வகை ஆன்மிகம் பேசினீரோ? 
முழு அரசியல்வாதியாகும் ஆன்மீகத் தியானத்தின் போது 
அது சரி, அரசியல் ரீதியானதது, இல்லாதது என்ற கேள்விகள் பிரிக்க முடியுமா என்ன? மக்களை பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் பேசுவதும் செயல்படுவதும் தானே அரசியல்? அது கூட இல்லாமல் என்ன வெளக்கெண்ணைக்கு தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்?

தலைமை பண்பு, சேவை மனப்பான்மை   என்பது வாழ்க்கையோடு ரத்தத்தோடு  சிறுவயது முதல் நாடி நரம்பில்  கலந்தது..திடீரென்று உருவாகுவதல்ல  ரஜினி..!! அரிதாரங்கள்  எல்லாம் சீக்கிரத்தில் களைந்து போகும் என்பது உச்ச நடிகரான  உமக்கு நன்றாகவே தெரியும். 

2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

மோடி உத்தரவு...சாரி நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிபதி திரு.மைக்கேல் குன்ஹா அவர்களின் தீர்ப்புக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்னும் மூன்றே மாதங்களில் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டுமென்று கடுமையாக (!!) எச்சரித்ததால், கனக்குப் புலி குமாரசாமியை வைத்து மீண்டும் ஜெயாவை முதல்வராக்கினது நேற்றைய வரலாறு.

ஊடக பிம்பத்தினாலும் தொடர்ச்சியான பிரச்சாரத்தினாலும் கட்டியமைக்கப் பட்ட 2ஜி வழக்கிலிருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆ.ராசாவையும் கனிமொழியையும் விடுதலை செய்தபின் இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் களத்தில்  இறங்கி,  இன்னும் 6 மாதத்தில் அனைத்து 2ஜி வழக்குகளையும் முடிக்க வேண்டும் என்று கவலை (!??) தெரிவித்து விட்டார்கள். இது இன்றைய செய்தி. இணைப்பு. 

நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அப்படியே கீழே.

"சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை நீண்ட நாட்களுக்கு இருட்டில் வைத்து இருக்க முடியாது. இந்த விவகாரம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்குகளில் ஏன் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதை மக்கள் அறிய வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் போக்கு குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்; மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே, 2 ஜி தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது." 

இதில் கவனிக்கப் பட வேண்டிய கருத்து "விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது."    ஆக, இனி ஒரு குமாரசாமி வருவார். தீர்ப்பு எழுதுவார் ஆ.ராசா மற்றும் கனிமொழி குற்றவாளியென்று. இது நாளை நடக்கப் போகும் வரலாற்றுச் செய்தி. 

வெற்றிடம் அரசியலிலா..?இல்ல..

யாரார்க்கு என்ன வேஷமோ...

தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பும் அம்பிகளில் இவரும்  ஒருத்தர்.

அரசியல் பேசக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனா அரசியல் பேச வச்சிட்டாங்கன்னு, வீட்ல ஏற்கனவே கண்ணாடி முன்ன நின்னு பல தடவ பேசிப் பார்த்த டயலாக்கை சும்மா அவுத்து விட்டுப்புட்டாரு நம்ம தலைவரு.

சரி, அப்படியே  அந்த மேடையில இவருக்கு முன்னாடி பேசுனவங்க  கடைசி நேரத்துல,  நான் உள்பட  யாருமே அரசியலே பேசக்கூடாதுங்கிற  இவரு விரதத்தை கலைக்க முடியும்னா ..

அரசியலுக்கு வந்த பின் எத்தனையோ பிரச்சினைகளை   தமிழகம் சந்தித்தபோது, உங்கள் கருத்து என்ன என்று பல மீடியாக்கள் மூலமா வலியுறுத்திக் கேட்டும் வாயத்தொறக்கலன்னா  அது கள்ள மௌனம் தானே? 

சரி அது கூட இருக்கட்டும். இப்ப சிங்கத்த  உசுப்பி விட்டுட்டாங்கல்ல.. எச்ச ராஜா பெரியார் சிலைய உடைப்போம்னு சொன்னது  தப்பா  இல்லையான்னு தன்  கருத்த சொல்லுவாருங்கிறீங்க?

ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் பிளவுகள் மற்றும் பாஜகவால் பொம்மையாக  ஆட்டிப்படைக்கப்படும் ஒரு லும்பன்களின் கூடாரத்தையும் ஒரு பலமுள்ள எதிர்க்கட்சியாக கட்டுக்கோப்பாக இருக்கும் திமுகவையும் நல்ல தலைமை இல்லாத வெற்றிடம் இருக்கிறது என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?


கண்ணா..இங்க பாரு..நீயா ஓடிடு..இல்லேன்னா ஓட வைப்போம். உன் முதலாளி பாஜகவையும் சேர்த்து.


நன்றி எச்ச..

காலி பண்ணிட்டீயே எச்ச ..அவ்வ்வ் 
கெட்டவர்கள் மூலமாகவும் சில சமயம் நல்லவைகள் நடப்பதுண்டு. 

அந்த வகையில், தமிழகத்திற்குப் பிழைக்க வந்து இன்றைக்கு தமிழக மக்களுக்கு  குறிப்பாக இளைஞர்களுக்கு  தமிழுணர்வையும் ஒற்றுமையையும்   தூண்டும் சக்தியாக தன்னையுமறியாமல் சதா உழைத்துக் கொண்டிருக்கும் "எச்ச" என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப் படும் திரு எச்.ராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல காரணம் உண்டு.

1. முன் தீர்மானிக்கப்பட்டு கூட்டப்பட்ட கூட்டத்தில்   திடீரென்று எம்ஜிஆர் பக்தனாக வேஷம் போட்ட  ஆன்மீக அரசியல்வாதியும் அவரின் நல்லாட்சி தந்திரமும்  பரபரப்பில்லாமல்  போய்விட்டது.

2. தமிழர்கள் சாதி, மதம், கட்சி, வயது வித்தியாசமில்லாமல் பாஜகவை நோக்கி கல்லெறியத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 2019 பாராளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வந்து விட்டது. 

நன்றி எச்ச...!

பின்  குறிப்பு: பெரியார் சிலையை நீ மட்டுமல்ல..வங்கியில்  கொள்ளையடித்தும், மோடியின் துணையோடு ஒரே வருடத்தில் 92000 கோடி வருமானம் பெருக்கியுமுள்ள பாஜகவின் பைனான்சியரான அதானியே  வந்தாலும் முடியாது. (உன் குடும்பத்துல உள்ள எல்லோர் பெயரையும் தமிழக மக்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஒரு சங்குக்கு ...சாரி.. சேஞ்சுக்கு அதானி)



எடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா?

காட்சி ஊடகங்களும் அதில் பல்வேறு வேஷங்களில் காட்சி கொடுக்கும் அம்பிகளும்  அதிமுக கூன்பாண்டிகளும் கூறிக்கொள்வது "பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எடப்பாடி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதே சாதனை தான்" என்பது.

அரசு ஊழியர் போராட்டம், அரச போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி, விவசாயிகள் போராட்டம், நீட் பிரச்சினை, தலைமை செயலாளர் அலுவலக ரெயிடு, குட்கா விவகாரம், எம் எல் ஏக்கள் நீக்கம் என்று  எந்தப்  பிரச்சினையானாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் காலில் மண்டியிட்டு ஆளுநர் உதவியோடு   தமிழகத்தின் உரிமையை அதன் மானத்தோடும் கூட விற்றுப் போட்டது சாதனையென்றால்..

மாட்டிக்கொள்ளாமல் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலும் சாதனை தானே?



தூய்மை இந்தியா - சொன்னதைச் செய்வோம்!!

"தூய்மை இந்தியாவே 2019ல் மஹாத்மா காந்தியின் 150 ஆவது  ஆண்டிற்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாகும்"
- ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி கூறியது. 

சொன்னதைச் செய்வோம் என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மித்ரோன் 



ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...