மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

மய்யம் என்றொரு அயோக்யம்


இடதுசாரிக்  கொள்கையுமில்லை..
வலதுசாரிக் கொள்கையுமில்லை
நான் மய்யம்.

ஆரியமுமில்லை..திராவிடமுமில்லை 
நான் மய்யம் 

இரண்டிற்கும் பொதுவானவன் 
இரண்டுமே வேண்டுமென்பவன்.
இரண்டுமே சமம்  என்னும் நடுநிலையாளன்.

வழக்கம் போல் புரியவில்லையா ..

மோடியின் பக்கமுமில்லை 
அவரால் வஞ்சிக்கப்பட்ட 
தமிழகத்தின் பக்கமுமில்லை.
நான் மய்யம்...
இரண்டும் சம தூரம் எனக்கு.

வர்ணாசிரமத்தின் பக்கமுமில்லை 
அதன் கோட்பாட்டால் 
ஈராயிரமாண்டு ஒடுக்கப்பட்ட 
மக்களின் பக்கமுமில்லை..
நான்  மய்யம். 
இரண்டுமே சம தூரம் எனக்கு.

சாமானியனும் கார்ப்பரேட்டும், 
மாட்டிறைச்சிக்காய் கொல்லப்பட்டவனும் - அவனைக் கொன்றவனும் 
வைப்புத்தொகையின்றி வங்கியில் இழந்தவனும் - அதே வங்கியின் அனுமதிக்கப்பட்ட கொள்ளையனும்,
மீத்தேன் எடுப்பவனும் நெடுவாசல் மக்களும்,
புது டெல்லியும் கதிராமங்கலமும்,
சமதூரம் எனக்கு - ஏனெனில் 
நான் மய்யம்.

ராஜபக்சேவின் பக்கமுமில்லை - அவனால் 
கொல்லப்பட்ட லட்சோப லட்சம் 
ஈழத்தமிழர்களின் பக்கமுமில்லை 
நான் மய்யம்.

நிர்பயாவுக்கும் - அவளை கற்பழித்து 
கொடூரமாய்க் கொன்றவனுக்கும் 
சரியாய் சமதூரத்தில்..
நான் மய்யம்.

நொறுக்கப்பட்டவன் - அவனை நொறுக்குபவன்  
உழைப்பவன் - அவன் உழைப்பை உறிஞ்சுபவன்
இரண்டும் சமம் எனக்கு.. 
நான் மய்யம். 

வங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ

பத்து நாள் கழித்து வாயைத்திறந்த  பின் வேண்டுகோள்..

விலைவாசி ஏற்றம்,  வேலையின்மை,  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமை, மாட்டிறைச்சி விவகாரம், கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்தாலும் பெட்ரோல்  தாறுமாறான விலையேற்றம், பணமதிப்பிழப்பு முடிவு தோல்வி, ஜிஎஸ்டி, காவிகளின் அட்ராசிட்டி  மற்றும் இவையெல்லாவற்றிற்கும் பிரதமரின் கள்ள மவுனம்  என்று ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசுக்கெதிராக   விமரிசனங்கள் எழும்பும் பொழுதெல்லாம்   காவிகள் ஒற்றை வாக்கியத்தைத் தான் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆன்லைன் அடிமைகள் மூலம் முட்டுக்கொடுத்தார்கள்.

அது.."போன காங்கிரஸ்  அரசைப்  போல இந்த அரசில் ஏதும் ஊழல் குற்றச்சாட்டு வரவில்லையே.."

இப்பொழுது பல்லாயிரக்கணக்கான கோடி  கொள்ளைகள் வெளியே  வரத்தொடங்கியதும் பாஜகவின் ஜெட்லீ பத்து நாள் கள்ள மவுனத்திற்குப் பின்  அது காங்கிரஸ் அரசிலேயே ஆரம்பித்து விட்டதென்றும் அது அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என்றும் நழுவுகிறார். அதிலும் ஆன்லைன் அடிமைகள் ஒருபடி மேலே போய் "ஊழல் வெளியே தெரிய வைத்தது பாஜகவின் சாதனை" என்று கூசாமல் சாணி எறிதலுக்கு முகம் கொடுக்கிறார்கள். உண்மையில் நீரவ் மோடியை பணத்தோடு  வெளியே தப்பி ஓட வைத்தது பாஜக என்பது வேறு விஷயம்.

ஏம்பா அப்ரசண்டிகளா..2ஜியும் அப்படித்தானே காங்கிரஸ் ஆட்சியில் வெளியே வந்தது? 

உங்கள் கூற்றுப்படியே பார்த்தோமானால், அதாவது நீரவ் மோடி யின் 11000 கோடி ஏப்பத்திற்கு பாஜக காரணமில்லையென்றால்..

1. அதற்கு முன் 2ஜியின் "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்ற கொள்கைகளை வகுத்ததுமல்லாமல் இழப்பை ஏற்படுத்திய  பாஜக தான் முதல் குற்றவாளி என்று ஒத்துக்கொள்.

2. பாஜக குற்றவாளி இல்லையென்றால் நீதிபதி ஷைனியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு  திமுகவிடம் மன்னிப்பு கேள்.

சொரணை என்ற ஒன்று இருந்தால்.





தினமலர் சிற (ரி )ப்பு நிருபர்?

மாற்றம் வேண்டும் என்று பசப்பும் கபடதாரிகள் எல்லாம் "திமுகவிற்கு மாற்று" என்ற ஒற்றைப் புள்ளியில் தான் வெவ்வேறு வகையான குரல்களில் கூவிக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சி (?!)களிலிருந்தே  எத்தனை முறை தோலுரித்தாலும் வலிக்காதது மாதிரியே நடிப்பதில் காவிகள் கில்லாடிகள்.

அதிலும் தினமலர் போன்ற அவாளின் பத்திரிகை அவ்வப்போது தன்  மனதின் ஊறலை சிறப்பு நிருபர் என்ற பெயரிலும் அதன் தொடர்ச்சியாக  வாசகர் கருத்து என்ற பெயரிலும் தனக்குத்தானே சொறிந்து கொண்டு புளகாங்கிதம் அடைவது வழக்கம். 


இன்றைய ஆன்லைன் பதிப்பில் கமல், ரஜினியின் வருகை ஆயிரங்காலத்து பயிர்களுக்கு ஆபத்து?  (இணைப்பு  என்ற தலைப்பில் "அப்துல் கலாம் வீட்டில் அரசியல் பயணம் துவங்கியதால் சிறுபான்மையினர் ஆதரவும்,  நல்லக்கண்ணை சந்தித்ததால் இடதுசாரிகள் ஆதரவும்,  கெஜ்ரிவாலை அழைத்ததால் நேர்மையை விரும்பும் உயர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆதரவும் கிடைக்கும்" என்று ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

இஸ்லாமிய பெயரை வைத்திருந்தாலும் அக்ரஹாரத்து அடிமையாகவே வாழ்ந்து மறைந்த அப்துல் கலாமே சிறுபான்மையினர் ஆதரவை பெற்றவர் இல்லை என்பதோடு அவர் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு நேர்ந்த கொடுமையின் போது வாயைத் திறக்காமல் கனவு காண சென்றது தினமலருக்கு மறந்திருக்கலாம். சிறுபான்மையினர் மறக்க மாட்டார்களே அம்பி?

கெஜ்ரிவாலை தினந்தோறும் தூற்றிக்கொண்டிருந்த ஒரே தமிழ்  பத்திரிக்கையான தினமலருக்கு இன்று நேர்மையை விரும்பும் உயர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடையாளமாகத் திடீரென்று அவர் காட்சியளிப்பதின் காரணம்  இவர்கள்  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் தானே? இருக்கலாம்..அவர் சமோசாவுக்கே கோடிக்கணக்கில் செலவழிப்பவரல்லவா..?

அது சரி, போகிற போக்கில் நேர்மையை விரும்பும் உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் - அப்படின்னா  யாரு? நீரவ் மோடி, லலித் மோடி, அம்பானி மற்றும் அதானி போன்றோரா?

அம்பி..போயி  ஆத்துல   யாராவது பெரியவா   இருந்தா வரச்  சொல்லுடா ..நேக்கு விவரம் பத்தாதுடா ..



கமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்?

லாஜிக் உதைக்குதே..

கமல் கட்சி ஆரம்பிப்பதால் தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாக ஆரம்பித்ததிலிருந்தே விமரிசித்தாலும் அவாளின் பத்திரிக்கையான தினமலர்  மட்டும் குதூகலத்துடன் நிமிடத்திற்கொரு தடவை கவரேஜ் செய்வதிலும் அதிலும் "கமல் பாஜக தலைவர்களை சந்திக்காததினால் தனக்கான பாதையை தெரிவு செய்து கொண்டார்" என்று கமலுக்கே தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.

படம் நன்றி: பத்திரிகை டாட் காம் &  "கரன்"
படம் நன்றி: பத்திரிகை டாட் காம் &  "கரன்"


நீரவ் மோடி - இப்போதைக்கு இவர்

Leading the Way..(???)


குஜராத் மாநில அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை வெளியிட்ட விளம்பரங்களில் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள்..!

Leading the Way..

இப்பத்தான் தெரியுது.

மோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்

அடிமையின் வாக்கல்ல இது;
கடைந்தெடுத்த அரசியல்வாதியின் 
கயவாளித்தனம்..!!

தன்மானத்தமிழனை தலை நிமிரச்செய்த போது ..

மோடி சொன்னதால்தான் அதிமுகவில் இணைந்தேன் என்று பன்னீர்செல்வம் கூறியது பரவலாக தமிழகம் முழுவதும் சந்தி சிரித்தாலும் இப்போது அதை வேறு விதமாகவே அணுக வேண்டியுள்ளது.

காரணம்,  அவர் சொல்லியிருக்கும் நேரமும் அதிமுக தலைவர்களுக்குள்ளாகவே வெளிப்படையான மாறுபட்ட கருத்துக்களும், திரு.ஜெயக்குமார் அவர்களின் மிகக்  காட்டமான சமீபத்திய  பேட்டிகளும் ஒரு புள்ளியை மையப்படுத்தினது. அவைகள் வெவ்வேறு குரல்கள் இல்லை என்பதை காலம் சீக்கிரத்தில் உணர்த்தும்.

அவர்களை இணைத்திருக்கும்  அந்தப் புள்ளி "ஆபரேஷன் தமிழ்நாடு"திட்டத்தின் மற்றொரு அத்தியாயம்..!!! 

ஆர்கே நகரில் தினகரனுக்கு விழுந்த வாக்குகள் பணத்திற்கானது மட்டுமே இல்லை என்பது ஊரறிந்தது. மோடியை அல்லது பாஜகவை அடியோடு வெறுத்த மக்களின் கோபமும் சேர்த்தே தான் அத்தகைய வெற்றியைத் தேடித்தந்தது. அன்றைய பொழுதில் தினகரன் பாஜக எதிர்ப்பு முகமாகவே பார்க்கப் பட்டார். 

இன்றைக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு என்பது வாக்குகளைத் தேடித்தரும் என்பதை அவர்களின் கூட்டணிக் கட்சிகளே உணர தொடங்கியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, தெலுங்கு தேசம்  போன்ற மாநிலங்களில் பாஜக  எதிர்ப்புக் குரல்கள் வழுத்துக் கொண்டிருக்கின்றன. 

தமிழகத்திலும் அதன் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை. 2019 பாராளுமன்ற தேர்தலில் எப்படியாயினும் வாக்குகளைப் பெற்று சில இடங்களை வென்ற பின் பாஜகவுக்கு ஆதரவளித்து, அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து மீண்டும் இதே வாக்கியத்தை  சொல்வார்கள்....

மோடி சொன்னதால்தான் இணைந்தோம்..

தமிழகமே ஜாக்கிரதை..

ஆபரேஷன் தமிழ்நாடு?

சோழியன் குடுமி சும்மா ஆடாது 



மிகப்பெரிய பொய்யை மிகச் சாதாரணமாக சொல்வதும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதும்  ஆரியனின் இயல்பு என்பதே ஈராயிரம் ஆண்டு வரலாறு. வரலாற்றை எத்தனைதான் திரித்து ஓதினாலும், உண்மைகளும் தொடர்ந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளது.

இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதின்  நோக்கமே   நம் பங்குக்கு நாம் செய்ய வேண்டியதை செய்தே ஆகவேண்டும் என்பதால் தான். தமிழகம் நாளை இன்னொரு உத்திரப்பிரதேசமாகவோ குஜராத்தாகவோ மாறக்கூடாதென்பதற்காக எம்மால் இயன்ற விழிப்பைச்  செய்ய எத்தனிக்கிறோம்.

கடந்த சமீப காலங்களாக, அதுவும் ஆர்கே நகரில் நோட்டாவுக்கும் கீழே மண்ணைக்கவ்விய பின் காவிகளின் போக்கில் ஒரு ஆக்ரோஷமான  வித்தியாசம் உண்டு. 

எச் ராஜா என்பவர் எப்போதுமே தன்னுடைய தரத்தில் பேசுகிறார் என்பதால் கண்டுகொள்ளத்  தேவையில்லை. அவர் அப்படி பேசுவதுதான் மக்கள் இன்னமும் துரத்தியடிக்கத் தேவையானதும் கூட.

ஆனால், ஜீயரின் சோடா பாட்டில் வசனம், நயினார் நாகேந்திரனின் தலைக்குப் பரிசு அறிவிப்பு, தொலைக்காட்சி விவாதங்களில் விமரிசகர், பாஜக ஆதரவாளர், நிபுணர் என்ற பெயர்களில் கலந்து கொள்ளும் அம்பிகள் மற்றும் அடிவருடிகளின் மொக்கத்தனமான கூச்சல்களும் மட்டுமல்லாது, தந்தி டிவி பாண்டே போன்றோரின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்னமும் நூதனமான பிரச்சாரமே.

திருச்சி வேலுச்சாமி என்பவர்  கடந்த மக்கள் மன்றத்தில் பேசும்போது இந்தியா பாகிஸ்தான் போரில் தன்  உயிரை ஈந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு இஸ்லாமிய போர் வீரனைப் பற்றி பேசும்போது குறுக்கிட்ட பாண்டே, "அவர் ஒரு இஸ்லாமியரா இந்தியரா" என்று நல்லவனை போல விஷத்தைக் கக்குகிறார்.

இஸ்லாமியர்கள்  எல்லாரும் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று மூலைக்கு மூலை காவிகள் கொக்கரித்ததை அவர்கள் இந்தியர்கள்தானே என்று பாண்டே போன்றவர்கள் அதே மேடையில் ஜீயர் போன்றோர் இருக்கும் பொழுது ஒரு நடுநிலை ஊடகவியலானாக பதிவு செய்யமாட்டார்.

ஏனென்றால் ஆபரேஷன் தமிழ்நாடு திட்டத்தில் அவர் ஒரு மூலைக்கல். எனவே மக்கள் மன்றம் நிகழ்ச்சியை புறக்கணிப்பது பொதுமக்களின் இன்றைய கடமை. 


 

ரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தனம்

பாரதிய (ஜனதா  கட்சி) வங்கி?


காவிகளின் ஆதிக்கத்தில் ஜனநாயக அடிப்படை மாண்பு வன்புணர்ச்சிக்குள்ளாக்கப் பட்டிருப்பதும், விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்களின் கவர்ச்சிக் குத்தாட்டங்களும் மிக ஆபத்தான சூழ்நிலையில் இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்றே அனுதினமும் தெரிவிக்கின்றன.

அதிலும், தன்னாட்சி அமைப்புகளான தேர்தல் ஆணையம், தணிக்கை, நீதிமன்றங்கள் மட்டுமல்லாது ரிசர்வ் வங்கியின் கள்ளக்  கூட்டணி  என்பது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்பது உண்மை.

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பணம், கரூர் அன்புநாதன் கண்டைனர் போன்ற காமெடிகளை மக்கள் மத்தியில் தங்களை தோலுரித்துக் காட்டியிருந்தாலும் செல்லாத நோட்டு விஷயத்தில்  இன்னமும் தெள்ளத்தெளிவாக துணிச்சலாக மத்திய பாஜக அரசாங்கத்திற்கு ஊதுகுழலாய்  வாசித்துக்கொண்டிருப்பது மிக வெட்கக்கேடானது. அருவருக்கத்தக்க எதேச்சதிகாரம்.

கறுப்பு பண ஒழிப்பு என்ற மோசடியான திட்டம் இன்னமும் வெளியே சரியாக அம்பலப்படாமல் இருக்க முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிற, மோடியின் மாநிலமான குஜராத்தை சேர்ந்த ஊர்ஜித்  பட்டேலை கவர்னராகக் கொண்ட ரிசர்வ் வங்கி இனி என்னவெல்லாம் செய்திருக்கிறதோ ?



கழகமில்லா ஆட்சி..?

உ.பி யும் உத்திராகண்டும் சாட்சி.

அது அவரு சொந்த கருத்து..

என்னதான் இணையதளங்களின் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்ட  ஆட்களை வைத்து முட்டுக் கொடுத்தாலும் அதே வலைத்தளங்களிலேயே அசிங்கப்படுவது காவிகளின் பொழுது போக்கு. 

வலிக்காதது மாதிரியே நடித்தாலும் சில சமயங்களில் கதவை மூடிவிட்டு கதறி அழும் நிலையை அவர்களின் அப்ரசென்டிகளே உருவாக்கி விடுவார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (07.02.2018) அவாளின் பத்திரிக்கையாகிய தினமலரின் இரண்டு செய்திகளில்,  

1. உத்திராகாண்ட் முதலமைச்சரின் கடந்த 9 மாத காபி செலவு மட்டும் 68 லட்சம். இணைப்பு 1 

2. உ.பியில் தவறாக ஊசி போட்டதால் 46 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு. அத்தனை பேரின் வாழ்க்கையும் அந்தோ. இணைப்பு 2 

இப்போ சொல்லுங்கள். திருமதி தமிழிசை ..

கழகமில்லா ஆட்சி ...குலை நடுங்கிப் போச்சி.

த்தூ ...

பாண்டே பயங்கரவாதம்

என் பொய்களுக்கு என்ன பதில்?

வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கருத்தை சர்ச்சையாக்கி, திரும்பத் திரும்ப அது குறித்த செய்திகளையும் விவாதங்களையும் நடத்தி தமிழகத்தில் எப்படியாயினும் இந்துக்களாய் ஒன்று சேர்த்து விடலாம், அவர்கள் முதுகில் சவாரி செய்யலாம் என்று விடா முயற்சி செய்து ஓரளவுக்கேனும் ஒரு தளத்தை உருவாக்கி வைத்திருந்ததை புன்முறுவலோடு கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் பார்த்து  விஜயேந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததினால் தமிழர்களாய் ஒன்று சேர்ந்து கும்மியடித்து விட்டதில் கலங்கியிருந்த காவிகள் தரப்புக்கு இப்போ இன்னொரு பிரச்சினை.

அது தான் நீட் தேர்வு வர இருக்கிறது.

கடந்த வருடமே பாஜகவுக்கு எதிராக ஆப்புகள் கூர்சீவப்பட்டிருந்ததை அறியாதவரல்ல  பாண்டே . கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி மூலமாக எத்தனை முறை அசிங்கப்பட்டிருந்தாலும் துடைத்துக் கொண்டு களமிறங்கிருக்கிறது அடுத்த முயற்சியில்.


நேற்று திமுகவின் நேரு பேசியதை அப்படியே திரித்து, தந்தி டிவியினுடைய ட்விட்டர் பக்கத்தில்  முட்டு சந்தில் சிக்கியவராய்  வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த அதி தீவிர யோக்கியர்.

நேரு பேசிய வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்..நீங்களும் உங்கள் பங்குக்கு....எவ்வ்வ்வளவு முடியுமோ...அவ்வளவு...





யோக்கியன் வர்றான்..

கம்பெடுத்து வெளில வை..



தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (!!!???) போராட்டக்காரர் அன்னா ஹசாரே இன்று தெரிவித்தார்.

தேர்தல் வரும் பின்னே யோக்கியன் வருவான் முன்னே என்கிற நவீன மொழிக்கேற்ப வந்துட்டார் இந்த மகா யோக்கியர். 

கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் மக்கள் அல்லோகலப்பட்டு கிட்டத்தட்ட இந்தியாவை நாற்பது ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு  போய் விட்ட போது, எந்த வலைத்தளங்களில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் இளைஞர் கூட்டம் எழும்பியதோ..அதே தளங்களில் வலை போட்டு தேடியும் கிடைக்காமல் பதுங்கிக்கொண்ட இந்த கிழட்டு ஓநாய் மறுபடியும் ஊளையிட ஆரம்பித்திருக்கிறது..

அன்னா ஹசாரே...நீங்கள் எந்த விதமான போராட்டத்தையும் நாடகத்தையும் நடத்துங்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று மட்டும் கொச்சைப்படுத்தாதிருங்கள். 

வேஷம் களைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது அன்னா ஹசாரே..கிளம்புங்கள்.

பாஜக ஸ்லீப்பர் செல் 


 


கர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி


கர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி 
-இன்றைய (04.02.2018) செய்தி.

உத்திரப்பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 18 என்கவுண்டர்கள் 
An Encounter in every 3.5 hrs in U.P
-இதுவும் இன்றைய செய்தி தான் 

















வரமாட்டேன்ன்னு சொல்லு...

ஆன்மீக அரசியல்வாதியின் அப்டேட்
"தலைவர பேட்டி எடுக்க வந்திருக்கோம்" 

"ரெண்டு நாள் முன்னாடி தான வந்துட்டு போனீங்க"

"அது வந்து ..அன்னக்கி மத்திய பட்ஜெட்  பத்தி கருத்து கேட்கலாம்னு வந்தோம்.."

"அதான் அப்பவே சொன்னேன்ல..தலைவரு பாத்ரூம் ல இருக்காருன்னு.."

"இல்ல..இப்ப.. மதுர ஆதீனம் தமிழர்கள் இந்துக்கள் இல்லன்னு சொல்லிருக்காரு ..அதான் ஆன்மீக அரசியல் தலைவரு கருத்த கேப்போம்னு..வந்தோம் ....தலைவரு இருக்காரா..?"

"அதான் ரெண்டு நாள் முன்னாடியே சொன்னேன்ல.."

இமயமலைக்கு போயிட்டாருன்னு சொல்லச் சொல்லியிருக்கலாமோ?

லோகோ டிசைனிங் சென்டர்

 ( Cut & Paste மட்டும்)


கட்டிங்.வெட்டிங்.ஓட்டிங்

மிகவும் சிறந்த முறையில் Cut & Paste தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த விலையில் உங்கள் நிறுவனங்களுக்கு லோகோ தயாரித்து தரப்படும். 

குறைந்த விலைன்னா எவ்வளவு ...?

அதாவது எங்கள் மன்றத்தில் உறுப்பினரா சேரணும் ..அப்புறம் ரெண்டு பேர  சேர்த்து விடணும். 

அப்புறம்..?

இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்...


போடாங்ங்ங் ...

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...